ஐ.பி.எல்-ஐ எதிர்த்த போராட்டக்காரர்கள், இவர்களை எதிர்த்திருக்கலாமே - கமல் அதிரடியான கேள்வி !

சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்க...

சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்காரர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றகையிட முற்பட்டனர்.

அப்போது போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் கலவர பூமியாக மாறியது, அதன் பிறகு நடந்தது ஒரு வரலாறு. இதுபற்றி ரஜினிகாந்த் கூட போலீசாருக்கு ஆதரவாக ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில் இன்று சென்னை இன்டர்நேஷனல் சென்டரில் பத்திரிகையாளரை சந்தித்தார் கமல்ஹாசன். அவரிடம் ஐ.பி.எல்-க்கு எதிராக நடந்த போராட்டத்தை பற்றி கேட்ட போது, அவர்கள் போராட்டம் செய்தது நல்ல விஷயம் தான், ஆனால் வெறும் 22 பேர் விளையாடுகின்ற போட்டியை எதிர்த்து முற்றுகையிட சென்ற போராட்டக்கார்கள் அதற்கு பதிலாக தலைமைச்செயலகத்தில் விளையாடி வரும் 234 அமைச்சர்களை முற்றிகையிட சென்று இருக்கலாம் என தனக்கு உண்டான பாணியில் பதிலளித்தார் கமல் .

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About