சினிமா தியேட்டரில் தாயின் அனுமதியோடு 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

சினிமா தியேட்டரில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொழிலதிபர் ம...


சினிமா தியேட்டரில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொழிலதிபர் முகைதீன் குட்டியும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சிறுமியின் தாயும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் உரிமையாளர் கடந்த மாதம் காவல் நிலையத்தில் ஒரு சி.சி.டி.வி. காட்சியை ஒப்படைத்தார். அதில் தியேட்டரில் சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போதே 60 வயதுள்ள முகைதீன் குட்டி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துகொண்டிருந்தார். இதை அருகில் இருந்த சிறுமியின் தாய் கண்டும் காணாமல் இருந்தார். இதுகுறித்து உடனடியாக விசாரிக்காமல் போலீஸார் அமைதியாக இருந்தனர். இந்தப் பிரச்னை மெல்ல வெளியில் கசிந்ததை அடுத்து நேற்று முன்தினம் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முகைதீன் குட்டி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து முகைதீன் குட்டிக்கு உடந்தையாகச் செயல்பட்ட சிறுமியின் தாயும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கை காலதாமதப்படுத்திய எஸ்.ஐ.மீதும் போக்ஸோ சட்டப்படி வழக்கு பதிவு செய்வது குறித்து கேரள டி.ஜி.பி. ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் கூறுகையில், "தியேட்டரில் 10 வயது சிறுமியுடன் தாய் நுழைந்திருக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு சொகுசு காரில் வந்த முகைதீன் குட்டி சிறுமிக்கும், அவரது தாய்க்கும் நடுவில்  இருந்த இருக்கையில் அமர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தாயின் அனுமதியோடு முழு திரைப்படமும் முடியும் வரை இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. இந்த வழக்கு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காத எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முகைதீன் குட்டியை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும்" என்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About