அனுபவம்
நிகழ்வுகள்
`சிகிச்சைக்குப் பிறகும் உதவுவேன்!’ - ரசிகருக்கு உறுதியளித்த ரஜினி
May 15, 2018
`காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வெளியாகும் முதல் படம் என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. காலா இசை வெளியீட்டு விழாவுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.
காலா இசை வெளியீட்டு விழா முடிந்து, அன்றிரவு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றார், மதுரையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன். ரயிலில்
காலா இசை வெளியீட்டு விழா முடிந்து, அன்றிரவு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றார், மதுரையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன். ரயிலில்
கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டில் அமர்ந்து சென்றார். இரவு 2.30 மணிக்கு, அந்த ரயில் மறைமலைநகர் ரயில் நிலையம் வரும்போது, நடைமேடையில் அவரின் கால் உரசியது. இதனால் அவரது இரண்டு கால்களும் துண்டாயின. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசிவிஸ்வநாதனை சந்தித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர், மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான செலவை ரஜினிகாந்த் ஏற்றுள்ளதாகவும், குணமான பிறகும் தேவையான உதவிகளை அவரே வழங்குவார் என்றும் தெரிவித்தார்.
0 comments