இது நடந்துவிட்டால் அடுத்த நாளே நான் கண்மூட தயார்- காலா விழாவில் ரஜினியின் எமோஷ்னல் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்...

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த் பேசுகையில் ‘இது ஆடியோ விழா போலவே தெரியவில்லை, படத்தோட வெற்றிவிழா போல் உள்ளது.

ஏன் வெற்றிவிழா போல், இது வெற்றிவிழா தான், கடைசியாக நான் கொண்டாடிய வெற்றிவிழா சிவாஜி தான், அதற்கு கலைஞர் கலந்துக்கொண்டு பல விஷயங்களை பேசினார்.

அவரின் குரல் இன்னும் மறக்க முடியாது, கூடிய விரைவில் அந்த குரல் மீண்டும் கேட்க வேண்டும், அது தான் என் விருப்பம்.

சிவாஜிக்கு பிறகு ரோபோ பெரிய வெற்றியடைந்தது, அந்த படத்திற்கு வெற்றிவிழா கொண்டாட முடியவில்லை, ஏனெனில் எனக்கு உடல் நலம் சரியில்லை.

அதை தொடர்ந்து உங்கள் ஆசீர்வாதத்தால் தான் என் உடல் நலம் நன்றாக ஆனது, அதன் பின் மீண்டும் நடித்தால் தான் மனம், உடல் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.

நானும் அதை தொடர்ந்து ஒரு சிலர் பேச்சை கேட்டு கோச்சடையான் படத்தில் நடித்தேன், ஆனால், ஒரு சில அதிபுத்திசாலிகள்(கிண்டலாக) கொடுத்த யோசனையால் கோச்ச்டையானில் நடித்து பிறகு அது தோல்வியுற்றாது.

நான் புத்திசாலிகள் பேச்சை கேட்பேன், அதிபுத்திசாலிகள் பேச்சை கேட்க கூடாது என்று அன்று தான் தெரிந்துக்கொண்டேன்.

இதன் பிறகு லிங்கா கதை கேட்டது தண்ணீர், அணை என்றதும் உடனே நடிக்க சம்மதித்தேன், எனக்கு தென்னிந்திய நதிகள் எல்லாம் இணைய வேண்டும்.

அப்படி நடந்தால் அடுத்த நாளே நான் கண்மூட தயார் என்று எமோஷனலாக பேச ரசிகர்கள் எல்லோரும் கத்தி ‘இப்படி பேசாதீங்க’ என்று கத்தினர்.

பல வருஷமாக ரஜினி கதை முடிந்துவிட்டது என்கின்றார்கள், ஆனால், உங்கள் புண்ணியத்தில் பல வருடங்களாக நான் ஓடிக்கொண்டே இருக்கின்றேன்.

காலத்திற்கு ஏற்றார் போல் நாமும் மாற வேண்டும் என்பதால் தான் கபாலி படம் செய்தேன்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About