தினமும் அரை மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்!

அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேட...

அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது.

தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை அடைய தினமும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

நடுவில் சின்ன தடங்கள் ஏற்பட்டாலும் இயந்திரத்தில் சுழல முடியாமல் சிக்கித் தவிக்க நேர்கிறது. மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் சந்திக்கிற மாற்றங்கள் உங்களது அன்றாட வேலையை சில நேரத்தில் குலைத்துவிடக்கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைக்கு பல நோய்கள் உடலில் ஏற்படுவதற்கு முக்கிய வழியாக காண்பிக்கப்படுவது, அல்லது குற்றம்சாட்டப்படுவது தொப்பை தான்.

தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர் வழி.... இது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் நிரந்தர பலன் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

தொப்பையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஏரளமாக இருக்கின்றன.

    சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவையும் வரக்கூடும். அதே போல பென்சல்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசின் என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதில், தொப்பை அதிகமிருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் வருவது, எப்போதும் சோர்வாக உணர்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

பொதுவாக மனிதர்களில் இரண்டு வகை உடல் அமைப்புகள் இருக்கின்றன. அவை பியர் ஷேப்டு பாடி மற்றும் ஆப்பிள் ஷேப்டு பாடி என்று சொல்வார்கள். பியர் ஷேப்டு பாடி என்பவர்களுக்கு உடலின் இடுப்புக்கு கீழே கொழுப்பு சேரும்.

இவர்களுக்கு பின்பகுதி, இடுப்புப்பகுதி பெரிதாகிக் கொண்டே போகும். ஆப்பிள் ஷேப்டு பாடி என்றால் தொப்பை பெரிதாக இருக்கும். பிறரை விட இவர்களுக்கு தொப்பை வேகமாகவும் கூடும்.

அதிக நேரம் கண் விழித்திருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். தேவையான அளவு நித்திரை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.
உடற்பயிற்சி

    தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் போதும் சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். 15 நாட்களில் தொப்பை குறையும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About