தமிழ் ராக்கர்ஸ்ஸா பார்த்து 5,10 போட்ட நல்லா இருக்கும்- செம்ம கடுப்பான பிரசன்னா

தமிழ் மட்டுமில்லாமல் உலக சினிமாவிற்கே தற்சமயம் பெரும் சவாலாக விளங்குவது பைரசி தான். தியேட்டரில் வெளியாகும் படம் அந்த காட்சி முடிவதற்குள்ளேய...

தமிழ் மட்டுமில்லாமல் உலக சினிமாவிற்கே தற்சமயம் பெரும் சவாலாக விளங்குவது பைரசி தான். தியேட்டரில் வெளியாகும் படம் அந்த காட்சி முடிவதற்குள்ளேயே இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

இதனை தடுக்க நடிகர் சங்கங்களும் அரசும் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் அது தோல்வியிலேயே சென்று முடிகிறது. படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் போன்றவை கூட இணையத்தில் வெளியாவதை பற்றி நடிகர் பிரசன்னா சமீபத்திய பேட்டியில் செம்ம கடுப்பாக பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், இதை தீர்க்க முடியுமா என்பது தெரியவில்லை. படத்தை எடுத்து தியேட்டருக்கு கொடுப்பது பதிலாக தமிழ் ராக்கர்ஸ்ஸிலேயே ரிலீஸ் பண்ணிடலாம். அவங்களா பார்த்து எதுனா அஞ்சோ பத்தோ கொடுத்தா வாங்கினு போக வேண்டியது தான். அவ்ளோ கேவலமான நிலைமையில் தான் போகனும்னா என்ன பண்ண முடியும்.

எல்லா முயற்சியும் செய்து பார்த்துட்டாங்க.. ஒன்னும் பண்ண முடியல, நான் தமிழ் ராக்கர்ஸ்ஸிடம் சரணடைகிறேன் என்றார். இவரது நடிப்பில் திரவம் என்ற வெப் சீரிஸ் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About