ஆண்டனி திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான முயற்சிகள் வரும். அப்படி தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டி...

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான முயற்சிகள் வரும். அப்படி தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி, இந்த ஆண்டனி எடுத்த வித்தியாசமான முயற்சி கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஹாலிவுட்டில் இது போல் பல திரைப்படங்கள் வந்துள்ளது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக இப்படி ஒரு கதைக்களத்தை கொண்டு வந்ததற்கே இயக்குனர் குட்டி குமாருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் துவக்கத்திலேயே ஹீரோ ஆண்டனி(நிஷாந்த்) ஒரு காரில் மயக்கத்துடன் இருக்கின்றார். விடிந்தால் ஆண்டனிக்கு திருமணம்.

ஆனால், இவர் காருடன் மண்ணில் புதைந்து கிடக்கின்றார், யார் தன்னை இப்படி செய்தது, ஏன் இப்படி ஆனது என்று ஆண்டனிக்கே ஆச்சரியம்.

இரவு முழுவதும் தன்னுடன் இருந்த மகன் எங்கே போனான் என்று அவரை தேடி ஆண்டனியின் தந்தை முன்னாள் போலிஸ் அதிகாரி லால் தேடி செல்ல, ஆண்டனி அதிலிருந்து வெளியே வந்தாரா, காதலியை மணந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நாம் முன்பே கூறியது போல் இது போல் பல படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளது, எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமென்றால் ரகுமான் இசையில் டேனி பாயோல் இயக்கத்தில் வெளிவந்த 127 ஹவர்ஸ் படம் கூட இதே கான்செப்ட் தான்.

அதேபோல் கொரியாவிலும் டனல் என்ற படம் இதே சாயலில் வந்துள்ளது, இந்த மாதிரி படம் என்றாலே பதட்டம் நம்மிடம் தானாகவே தொற்றிக்கொள்ளும், அதிலும் இதே சாயலில் ஹாலிவுட்டில் வெளிவந்த பரிட் என்ற படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

இப்படி பல படங்களின் சாயல் தெரிந்தாலும், முதல் முயற்சி என்பதால் வரவேற்கலாம், அதே நேரத்தில் ஹீரோ நிஷாந்த் மண்ணுக்குள் புதைந்து அவர் படும் கஷ்டம் நமக்கும் கொஞ்சம் பதட்டம் ஏற்படுகின்றது.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், லாலும் மகனை தேடும் அப்பாவாக ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

சிவாத்மிகாவின் இசை படத்திற்கு பெரும் பலம், அதை விட பாலாஜியின் ஒளிப்பதிவு மண்ணிற்குள் புதைந்து இருக்கும் ஹீரோவின் பதட்டத்தை நம்மிடம் தொற்ற வைக்கின்றது.

இத்தனை சுவாரஸ்ய கதையாக இருந்தாலும், அதை தொடர்ந்து சுவாரஸ்யமாக எடுத்து செல்ல முடியாமல் ஒரு சில இடங்களில் இயக்குனர் தடுமாறுகின்றார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், சுவாரஸ்யமான கான்செப்ட்.

இசை, ஒளிப்பதிவு

லால், நிஷாந்தின் நடிப்பு

பல்ப்ஸ்

திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகின்றது. ஏனெனில் இது போல் கதைக்கு இன்னும் வேகமான திரைக்கதை இருந்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் கண்டிப்பாக ஆண்டனி இன்னும் கவர்ந்திருக்கும், இருந்தாலும் புதிய முயற்சியை வரவேற்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About