அனுபவம்
நிகழ்வுகள்
ஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயலலிதா: மனம் திறக்கும் இறுதி ஊர்வல சாரதி
August 08, 2018
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காவேரி மருத்துவமனை இறுதி அறிக்கை வெளியான பிறகு, கருணாநிதியின் உடலை அவரது கோபாலப்புரம் இல்லத்திற்கு எடுத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மருத்துவமனை வளாகம் வெளியே தொண்டர்கள் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, அவர்கள் கதறும் அழுகுரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது.
கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் சென்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் வாகனம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றையும் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர். பரபரப்பாலும் பதற்றத்தினாலும் அப்பகுதியில் இருள் சூழத் தொடங்கியது.
இரவு சுமார் 8.00 மணியளவில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்புலன்ஸ். அந்த ஆம்புலன் உள்ளே, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் சாந்தகுமார்.
தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இறுதி ஊர்வல வண்டி ஓட்டியவர் இவர் தான்.
1977-ம் ஆண்டு முதல் ‘ஹோமேஜ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் சாந்தகுமார். இவர் 94 வயதில் மறைந்த கருணாநிதிக்கு மட்டும் அமரர் வாகனம் ஓட்டியவர் அல்ல.
2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இவரே வாகனம் ஓட்டினார். மேலும் நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கும் இவர் தான் அமரர் ஊர்தியை இயக்கி இருக்கிறார்.
பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் வாகனம் ஓட்டிய இவர், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இறுதி ஊர்வல வாகனத்தை ஓட்டியது கடவுளுக்கு செய்யும் திருப்பணிப் போல் உணர்ந்ததாக கூறுகிறார்.

0 comments