கருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்?

தி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். தற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ர...

தி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

தற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதி தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

கடந்த 1955-ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்த காலத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீட்டை கருணாநிதி வாங்கியுள்ளார்.


அதன் பின் 1968-ஆம் ஆண்டு அந்த வீட்டை தன் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்தார்.

இதையடுத்து 2010-ஆம் ஆண்டு தன்னுடைய 86-வது பிறந்த நாளின் போது, தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை கருணாநிதி அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

கருணாநிதி மற்றும் அவரின் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு இந்த வீட்டை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த அறக்கட்டளை கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மாளின் பெயரில் செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அறங்காவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About