மாதவிடாய் காலத்தில் நீங்கள் தொட்டு கூட பார்க்க கூடாத உணவுகள்!...

மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பத...

மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம்.

வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.

அதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.

ஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About