கேஜிஎப் மினி விமர்சனம்

கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது. ராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள...

கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது.

ராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள்ள நபராக மரணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார். அதானால் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். அந்த மிஷனில் அவர் கொடுரமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். அந்த மிஷனில் என்ன நடக்கிறதுஎன்பதே கதை

கன்னட நடிகர் யாஷ், ராக்கி கதாபாத்திரல் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் இதுபோல பொருந்தியிருக்க வாய்ப்பில்லாத அளவுக்கு நடித்துள்ளார். படத்தின் முதல் பாகம் சற்று நீளமாக இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதாக உள்ளது. 1980 ஆண்டுக்கு முன்னோக்கி செல்லும் அவருக்கு கொடுக்கப்படும் மிஷனே மக்களை கொல்வதுதான். மக்கள் தொகையை அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என்பதே இந்த மிஷனின் குறிக்கோள். இதனால் சரமாரியாகமக்களை கொல்கிறார் ராக்கி.

படத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ராக்கியின் தாயார் அவரிடம் பேசுகிறார். அந்த காட்சிகள் படத்திற்கு பொருந்தவில்லை. படத்தில் அதிகபடியான வன்முறை காட்டப்படுள்ளதால், குழந்தைகள் மற்றும் கர்ப்பமானவர்கள் படத்தை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

மேலும் படத்தில்1980மற்றும் 2018ஆம் ஆண்டு,என்று இரு காலக்கட்டங்கள் காட்டப்படுகிறது. இரு காலக்கட்டத்திலும் பல்வேறு கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தபடுகிறது.இதை இயக்குநர் சரியாக கையாண்டதால்திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ட்வீஸ்ட் படம் முழுமையிலும் உள்ளது.

படத்தின்கலை இயக்குநரின் பங்குதான் முக்கியமாக அமைந்திருக்கிறது.இந்த படத்தின் வெற்றியை முடிவு செய்யும் நபராக கலை இயக்குநரின்வேலை அமைந்துள்ளது. படத்தின் பாடல்களைவிட பின்னணி இசை கச்சிதமாக கதை களத்திற்கு பொருந்திஉள்ளது.

படத்தின் திரைக்கதை ராக்கியின் கதாபாத்திரத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது. ராக்கி இனி என்ன செய்வார் என்பதை அடுத்த பாகம் வரும் வரை காத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About