மாமனார் வீட்டில் மட்டன் சாப்பிடணும், அதனால World Economic Forum மாநாடுக்கு போகல, எடப்பாடியார்..?

World Economic Forum - WEF. இதைப் பற்றி அதிகம் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்றால் இவர்கள் வெளியிட்ட அ...

World Economic Forum - WEF. இதைப் பற்றி அதிகம் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்றால் இவர்கள் வெளியிட்ட அறிக்கைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். யார் இவர்கள். இவர்கள் நோக்கம் என்ன, ஏன் இத்தனை மெனக்கெட்டு உலக தலைவர்களை அழைத்துப் பேசுகிறார்கள் தெரியுமா..?

அறிமுகம்

World Economic Forum - WEF என்பது உலகப் பொருளாதாரம், அரசியல், கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உலக தலைவர்களையே அழைத்துப் பேசி உறுதி செய்வது தான் இந்த அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பு 1971-ல் தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் ஆனாலும் கடந்த ஜனவரி 2015-ல் தான் இந்த அமைப்புக்கு Swiss Host-State Act -ன் கீழ் சர்வதேச அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை உறுதி செய்யும் அமைப்பாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது.

உச்சி மாநாடு

சுவிசர்லாந்தின் பனி படர்ந்த ரிசார்டுகளைக் கொண்ட தாவோஸ் நகரில் World Economic Forum - WEF அமைப்பின் 48-வது ஆண்டு உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. வரும் 21 ஜனவரி 2019 முதல் 25 ஜனவரி 2019 வரை நடக்க இருக்கிறது.

இந்திய அரசியல் தலைகள்

உலகப் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடன் , வணிகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பெடோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் என மூன்று மத்திய அமைச்சர்கள் பயணிக்க இருக்கிறார்கள்.

மாநில அரசியல்தலைகள்

மத்திய அமைச்சர்களோடு, சில மாநில முதல்வர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் புதிதாக பதவி ஏற்று இருக்கும் காங்கிரஸ் அரசின் முதல்வர் கமல் நாத், பாஜகவை நிரந்தரமாக எதிர்க்கும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு, மகாராஷ்டிரத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் போன்றவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவர்களுடன்

சந்திர பாபு நாயுடுவின் மகன், தெலங்கானா முதல்வரின் மகன் கே டி ராமா ராவ், பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரீத் பாதல் போன்றவர்களும் பங்கேற்க வாய்ப்பிருக்கிறதாம். அரசியல் வாதிகள் ஒரு பக்கம் என்றால் இந்திய தொழில் அதிபர்கள் வேறு தங்கள் குடும்பங்களோடேயே வர இருக்கிறார்களாம்.

தமிழகம்..?

எடப்பாடி தலைமையிலான அரசுக்கு முன்னுக்குப் பின் முரணாக பேசவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமே இல்லாமல் மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கவும், மாமனார் வீட்டில் ஏற்பாடு செய்திருக்கும் விருந்தை உண்டு விழாவை சிறப்பிக்கவுமே நேரம் சரியாக இருக்கிறதாம்.

உலக அரசியல் தலைகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த World Economic Forum - WEF மாநாட்டின் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறார்களாம். ஆனால் இப்போது வரை அவரின் வருகை உறுதி செய்யவில்லையாம். ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள், பெல்ஜிய அரச குடும்பம், ஜோர்டன் அரச குடும்பம் என பல அரச குடும்பங்களும் பங்கேற்க உள்ளன.

அதிபர்கள்

அசர்பேய்ஜன், பிரேசில், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், ஈராக், பெரு, ருவாண்டா, செர்பியா, தென் ஆப்பிரிக்கா, உக்ரைன் போன்ற நாட்டு அதிபர்களின் வருகைகள் World Economic Forum - WEF அமைப்பே உறுதி செய்திருக்கிறது.

பிரதமர்கள்

பல்கேரிய, க்ரோஷியா, டென்மார்க், எகிப்து, எஸ்டோனியா, எத்தியோப்பியா, ஜார்ஜியா, லிபியா, மலேசியா, நேபாள், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், பெரு, ஸ்லோவாக்கியா, ஸ்லொவேனியா, ஸ்பெயின் போன்ற நாட்டுப் பிரதமர்களின் வருகையை அரசுத் தரப்பு விவரங்களும் செய்திகளும் World Economic Forum - WEF மாநாட்டின் பங்கேற்பதை உறுதி செய்திருக்கிறது.

உச்சி மாநாடு தலைமை

World Economic Forum - WEF-ன் 48-வது உச்சி மாநாட்டை 1. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, 2. உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம், 3. ஈராக்கில் இருந்து Basima Abdulrahman, 4. கொலம்பியாவில் இருந்து Juan David Aristizabal, 5. ஸ்வீடனில் இருந்து Noura Berrouba, 6. அமெரிக்காவில் இருந்து Julia Luscombe, 7. கென்யாவில் இருந்து Mohammed Hassan Mohamud, 8. ஜப்பானில் இருந்து Akira Sakano போன்றவர்களும் சேர்ந்து தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்கள்.

எதைப் பற்றி பேசலாம்..?

1.Globalization 4.0: Shaping a Global Architecture in the Age of the Fourth Industrial Revolution.
2.Emerging markets outlook
3.India and the World என பல சர்வதேச பிரச்னைகளைக் குறித்தும், வளரும் மிகப் பெரிய நாடான இந்தியாவைப் பற்றியும் தனித் தனியாக பேசி விவாதிக்க இருக்கிறார்கள்.

இந்திய வியாபாரிகள்

முகேஷ் அம்பானி குடும்ப சகிதமாக பங்கேற்க இருக்கிறார். அசீம் ப்ரேம்ஜி தன் மகனோடு பங்கேற்க இருக்கிறார். கெளதம் அதானி, உதய் கோடக், டிசிஎஸ் சந்திரசேகரன், லஷ்மி மித்தல், ஆதித்யா மித்தல், நந்தன் நிலக்கனி, ஆனந்த் மஹிந்திரா, அஜய் பிரமல், அஜய் சிங் என ஒரு பெரிய இந்திய வியாபாரிகள் படையே பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்திய ஆளுமைகள் & அதிகாரிகள்

இந்தியாவில் ஆர்பிஐ கவர்னர் என ஒரு பதவி இருப்பதை வெகு ஜன மக்களுக்குக் காட்டிய முனாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் ஐசிஐசிஐ வங்கி தலைவர் கே வி காமத், சர்வதேச நிதியத்தின் இயக்குநர் க்றிஸ்டின் லகார்ட், சர்வதேச நிதியத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக சமீபத்தில் பதவி ஏற்ற கீதா கோபிநாத், நிதி அயோக்கின் சிஇஓ அமிதாப் காந்த் போன்றவர்களும் World Economic Forum - WEF மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

வெளிநாட்டு வியாபாரிகள்

கோக கோலா, பெப்ஸி, யுனிலிவர், மார்கன் ஸ்டான்லி, அடிடாஸ், ஷெல், டெலிநார், அலிபாபா, நெஸ்ட்லே, ஐபிஎம் என பல்வேறு சர்வதேச வியாபார நிறுவனங்களின் சிஇஓ அல்லது தலைவர்கள் அவர்கள் நிறுவனத்தின் சார்பாக பங்கேற்க இருக்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About