குடிக்கு அடிமையானதால் தந்தையை பரிகொடுத்த பிரபல நடிகர்... தற்போது இவரது நிலை என்ன தெரியுமா?

நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ். இவரது கொ...

நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ்.

இவரது கொமடிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பலத்த வரவேற்பு உண்டு. ஆனால் வெள்ளித்திரையில் அனைவரையும் சிரிக்க வைத்த நாகேஷின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகமாக முடிந்தது.

நாகேஷ் வேறு மதத்தைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரது வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்பு ஒரு சமயம் விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரினை வாங்கிக் கொண்டு ஆசையாக தனது அம்மாவை பார்க்க வந்தவருக்கு அந்த ஆசை நிராசையாகிவிட்டது.

ஏனென்றால் அவர் சென்ற பொழுது அவரது அம்மாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். இப்படி தனது வாழ்வில் அடுத்தடுத்த பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நடிகர் நாகேஷ்.

இவரது மிகப்பெரிய கனவு தனது மகன் ஆனந்த் பாபுவை சினிமாவில் பெரிய ஆளாக கொண்டு வர வேண்டும் என்பதே... தனது மகனை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தினை தயாரித்து இயக்கினார்.

ஆனால் அதுவரை தான் சேர்த்து வைத்திருந்து பணத்தினை எல்லாம் இழக்கும் படமாக அப்படம் அமைந்துவிட்டது. அப்படத்தின் நஷ்டத்தால் பெரிய கடனில் மாட்டிக்கொண்ட இவருக்கு பல நோய்கள் தாக்க ஆரம்பித்துவிட்டது.

அதுமட்டுமின்றி சில படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்த தனது மகனிற்கு தோல்வி ஏற்பட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை எண்ணி மனம் மிகவும் வேதனைப்பட்டார். இதுவே நடிகர் நாகேஷின் நோயினை தீவிரப்படுத்தியது.

சர்க்கரை நோய், இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2009ம் ஆண்டு காலமானார். தனது மகனை பெரிய ஹீரோவாக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டவர், அந்த மகனே முழு நேர குடிபோதைக்கு ஆளானதால் அந்த புகழ்பெற்ற நடிகரையும் குடிபோதை குடித்துவிட்டது.

தற்போது குடிபோதையில் இருந்து மீண்டு வந்த ஆனந்த் பாபு சில சீரியல்களில் நடித்து வருகிறார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About