அனுபவம்
சினிமா
திரை விமர்சனம்..!
Deadpool 2 திரை விமர்சனம்-கொண்டாட்டத்திலும் சரி, பாக்ஸ் ஆபிஸிலும் சரி ஒரு படி மேலே தான்.
May 23, 2018
ஹாலிவுட்டில் ஸ்பூவ் மூவி என்றே தனியாக உள்ளது. ஸ்கேரி மூவி என்று தலைப்பிட்டு பல படங்களை வெளியிட, 1000 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து ஸ்பூவ் மூவி எடுத்தால் எப்படியிருக்கும், அது தான் இந்த Deadpool 2. Deadpool அளவிற்கு Deadpool 2 இருக்குமா? என்று படத்திலேயே ஒரு வசனம் வரும், அந்த வசனத்தை படம் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
Deadpool தன் மனைவியிடம் சந்தோஷமாக வாழ, வழக்கம் போல் ஒரு வில்லன் கும்பல் இவர் சந்தோஷமான வாழ்க்கையை கெடுக்க வர, அந்த மோதலில் தன் மனைவியை இழக்கின்றார்.
இதனால், தானும் இறக்கவேண்டும் என்று அவர் நினைத்தாலும், மரணம் அவரை நெருங்கவே முடியவில்லை, அந்த சமயத்தில் தான் ஒரு அமைதிக்காக எக்ஸ் மேன் டீமுடன் இணைகின்றார்.
அப்போது ரசல் என்ற சிறுவன் தனக்கு இருக்கும் நெருப்பு சக்தியை மிகவும் மோசமாக பயன்படுத்துகின்றான், அவனை கட்டுப்படுத்த Deadpool அங்கு செல்ல, ஒரு சில அசம்பாவிதங்களால் இருவருமே ஜெயிலுக்கு செல்கின்றனர்.
அந்த நேரத்தில் கேபிள் என்பவன் ரசல் வளர்ந்து தன் குடும்பத்தை அழிக்கப்போகிறான் என்பதை அறிந்து எதிர் காலத்திலிருந்து வருகிறான், ஆனால், அவன் சிறுவன் அவனை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று Deadpool தன் புதிய டீமுடன் களத்தில் இறங்க பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
Deadpool-லாக ரியான், படத்தில் இவர் முகத்தை மொத்தமாகவே 15 நிமிடம் காட்டினால் பெரிது, படம் முழுவதும் முகமூடி என்றாலும், அவர் பேசும் வசனத்திற்கு முகமூடியையும் மீறி எக்ஸ்பிரேஷன் தெரியும் போல, கலக்கியுள்ளார்.
குறிப்பாக தமிழில் இப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், தொடர்ந்து ஆங்கில படங்களை தமிழ் டப்பிங்கில் பார்ப்பவர்களுக்கு விருந்து, மற்றப்படி புதிதாக பார்ப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம்.
படத்தின் டைட்டிலிலேயே புதுமை மற்றும் கிண்டல் ஆரம்பித்துவிடுகின்றது, ஜேம்ஸ்பாண்டை கிண்டல் செய்து தான் இப்படத்தின் டைட்டில் போடுகின்றனர், அதிலும் இயக்குனர்- ஜான் விக் நாயை கொன்றவர், கதை- வில்லன்கள் என வித்தியாசமாக டைட்டில் கார்ட் போட்டு அசத்துகின்றனர்.
இன்றைய ட்ரெண்டில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் நீதி மய்யம், கமல் சார் போல் புரியாத டுவிட், வீரம் அஜித், தெறி விஜய் போல் நானும் மாஸா, விஷால் தமிழ் சினிமாவிற்காக ஸ்ட்ரைக் இருக்கின்றார் என அடித்து தூள் கிளப்புகிறது டப்பிங்.
ஆனால், பிரச்சனையும் இதுவே கூட, ஏனெனில் ஜாலியாக படம் பார்க்கவேண்டும் என்பவர்கள் சிரித்துக்கொண்டு கடந்துவிடுவார்கள், அதே நேரத்தில் கதைக்காக விரும்பி பார்க்க வருபவர்களுக்கு பல வசனங்கள் புரிய வாய்ப்பில்லை, ஏனெனில் உதாரணத்திற்கு நூலகம் எங்கே? என்று சப்டைட்டில் வருகின்றது, ஆனால், தமிழ் டப்பிங்கில் ‘ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் வருகின்றது.
படத்தின் ஆரம்பத்தில் வெறும் காமெடி டயலாக் வைத்தே கதையை நகர்த்தி வருகின்றனர், நீண்ட நேரம் கழித்து தான் சண்டைக்காட்சிகள் எல்லாம் வருகின்றதும், அதுவும் செம்ம செலவு பண்ணியிருக்கோம் சிஜிக்கு என்று சொல்லியே ஆரம்பிக்க, அதன் பிறகு சரவெடி தான். இரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைக்காட்சிகள். குழந்தைகளை கண்டிப்பாக அழைத்து செல்ல வேண்டாம்.
க்ளாப்ஸ்
Deadpool கதாபாத்திரமே செம்ம ஜாலியான கதாபாத்திரம், அதை சிறப்பாகவே இந்த முறையும் செய்துள்ளார் ரியான்.
படத்தின் வசனங்கள், எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கவுண்டர் வசனங்களால் கதையை நகர்த்தி செல்கின்றது.
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள்.
பல்ப்ஸ்
வசனமே தான், ஒரு சூப்பர் ஹீரோ படத்தை குழந்தைகள் பார்க்க முடியாது என்றால் அது இந்த Deadpool சீரீஸாக தான் இருக்கும். ஆபாச வசனம், இரத்தம் தெறிக்கும் சண்டை என நிரம்பி வழிகின்றது.
மொத்தத்தில் Deadpool-ஐ விட Deadpool 2 கொண்டாட்டத்திலும் சரி, பாக்ஸ் ஆபிஸிலும் சரி ஒரு படி மேலே தான்.

0 comments