என்ன நம்ம மேல பயம் போயிடுச்சோ.. தினகரனிடம் காட்டமாக கேட்ட சசிகலா!

ரிசல்ட் வந்து இத்தனை நாள் கழிச்சு, இப்போதான் சசிகலாவை சென்று பார்த்துள்ளார் டிடிவி தினகரன்! அப்போது சசிகலா கேட்டாரே ஒரு கேள்வி.. என்ன பதில்...

ரிசல்ட் வந்து இத்தனை நாள் கழிச்சு, இப்போதான் சசிகலாவை சென்று பார்த்துள்ளார் டிடிவி தினகரன்! அப்போது சசிகலா கேட்டாரே ஒரு கேள்வி.. என்ன பதில் சொல்வதென்றே ஆடிப்போய்விட்டாராம் தினகரன்!

அமமுக எப்படியும் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இடைத்தேர்தலில் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு பெருவாரியான இடங்களில் ஜெயிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாமே புஸ்ஸென ஆகிவிட்டது.

தேர்தல் வெற்றியை வைத்து நிறைய கணக்குகளை போட்டிருந்தார்கள் தினகரன். குளறுபடி, முறைகேடு போன்றவற்றினால் ஜெயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாலும், இந்த தோல்வியை எப்படி சசிகலாவிடம் சொல்வது என்ற பெரிய சிக்கல் தினகரனுக்கு வந்தது. அதனால் ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும் சசிகலா முகத்தில் விழிப்பதை தவிர்த்தே வந்தார்.

தேர்தல் தோல்வி

ஆனால் கடந்த ஞாயிறு அன்று, புகழேந்தி சென்று சசிகலாவை பார்த்துள்ளார். அப்போது தேர்தல் தோல்வி குறித்து நிறைய புலம்பிவிட்டாராம் சசிகலா. சிறையில் சசிகலாவை சென்று சந்தித்தை பற்றி புகழேந்தி தினகரனிடம் சொல்லி இருக்கிறார். இதை கேட்டதும், தினகரன், தன்னிடம் சொல்லாமல் எதற்காக போய் சசிகலாவை சந்தித்தீர்கள் என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

பயம் போயிடுமா?

இந்நிலையில்தான், அதாவது நேற்று, சசிகலாவை சந்தித்து பேசினார் தினகரன். ஏற்கனவே ரிசல்ட் வந்த நாளிலிருந்து தூக்கமின்றி அப்செட்டில் உள்ளார் சசிகலா. தினகரனை பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வியே, "இவ்ளோ நாளா நம்ம மேல அவங்களுக்கு இருந்த பயம், இப்போ போயிடுமா?" என்பதுதான்.

விளக்கம்

இதற்கு தினகரன், "வாக்கிங் போறப்பகூட என்கிட்டயே நிறைய பேர் வந்து "சார் நாங்க உங்களுக்குதான் ஓட்டுப் போட்டோம்., இப்படி ஆயிடுச்சேன்னு" சொன்னாங்க. எனக்கும் அதிர்ச்சிதான். இது சம்பந்தமாக மீடியாவுக்கும் விஷயத்தை சொல்லி இருக்கேன். ஓட்டு மிஷின்களில் என்னமோ செய்துவிட்டார்கள் என்று பெரிய விளக்கமே கொடுத்துள்ளார். அத்துடன், கையில் கொண்டுபோன அமமுக வாக்காளர்கள் பெற்ற வாக்குகள், பூத்துகளில் ஏஜெண்ட்டுகள்கூட போட்ட ஓட்டு கூட அமமுகவுக்கு விழாதது தொடர்பான சில ஆதாரங்களை சசிகலாவிடம் காட்டி உள்ளார்.

ஐடியா

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சசிகலா, "சரி, தேர்தல் ஆணையத்தை மட்டும் விமர்சிக்க வேணாம்" என்று அறிவுறுத்தி உள்ளார். தோல்வியால் கட்சி தாவல் நடக்காதவாறு ஒருசில விஷயங்களையும் மேற்கொள்ளுமாறு தினகரனுக்கு ஐடியா தந்தாராம் சசிகலா. அதனால் எப்படியும் ஒருசில தினங்களில் ஏதேனும் அதிரடிகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

இரட்டை இலை

சசிகலாவை பொறுத்தவரை அவர் எண்ணம், சிந்தனை எல்லாமே இரட்டை இலைதான். இதற்கு முன்பு எந்த சின்னம் நின்றாலும் அது தோல்விதான் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார். அதனால் அதிமுக உரிமை கோரும் வழக்கை கையில் எடுப்பாரா, அல்லது இரு கட்சி இணைப்பு பற்றி ஏதேனும் முடிவெடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About