ஆண்மையில்லாத்தனம்! இளையராஜாவின் சர்ச்சை கருத்துக்கு பிரபல இயக்குனர் பதில்

தான் இசையமைத்த பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்துவதை இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாடல்களை பயன்படுத்துவது சம்பந்தப்ப...

தான் இசையமைத்த பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்துவதை இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாடல்களை பயன்படுத்துவது சம்பந்தப்பட்டவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று சமீபத்திய பேட்டியில் கூறினார் அவர்.

96 படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியிருந்தார்கள். இந்நிலையில் இளையராஜாவின் பேட்டியை பார்த்த 96 படக்குழுவோ, அவருக்கு ராயல்டி கொடுத்த பிறகே பாடல்களை பயன்படுத்தியதாக தெரிவித்தது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, 80, 90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது. 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார் என்றார்.

    80,90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது.தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார்.
    — Seenu Ramasamy (@seenuramasamy) May 27, 2019

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About