நேசமணி”யை உலகளவில் டிரெண்டாக்கியவர் இவர் தான்

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டா...

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதிலும் வடிவேலு தான் பயன்பட்டிருக்கிறார்.

இதற்கு பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர். அதாவது, பேஸ்புக்கில் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் படத்தை பதிவிட்டு, அதற்கு தமிழில் என்ன பெயர் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு நெட்டிசன் ஒருவர், ”இதற்கு பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என்று சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக #PrayForNesamani எனப் பதிவிட, பலரும் அதையே மீண்டும் பதிவிடத் தொடங்கி வைரலானது. அதாவது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்கள் கூட, நேசமணிக்கு பிரார்த்தனை செய்யும் வகையில் ஏராளமான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.


இதன் பின்னணியில் குறும்புக்கார நெட்டிசன் விக்னேஷ் பிரபாகர். இவரை தற்போது நேசமணி பிரபாகர் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.

விளையாட்டாக பதில் கூறினேன். இந்த அளவிற்கு டிரெண்டாகும் என்று எதிர்பார்க்க வில்லை. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About