#Nesamani யிடம் அசிங்கப்பட்ட #ModiSarkar2 ...! உலகளவில் நேசமணிக்கு பெருகும் ஆதரவு

இன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்...

இன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்கிறது.

வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தில் தலையில் சுத்தி விழுந்ததால் அவரது உடல் நிலை நலம் பெற வேண்டி பிராத்தனை நடத்தி வருகின்றனர்.

பிராத்தனை என்றால் சிறிய அளவில் எல்லாம் இல்லை. டுவிட்டரில் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் டிரெண்டாகி பிராத்தனை நடந்து வருகிறது.

#Nesamani என்ற ஹேஷ் டேக்கில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை விளக்கும் #ModiSarkar2 என்ற ஹேஷ் டேகில் வெறும் 18 ஆயிரம் டுவிட்கள் தான் வெளியாகியுள்ளன.


உலகளவில் நேசமணி ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்திலும், மோடி சர்கார் ஹேஷ்டேக் 5வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்கும் நேரத்திலும் இந்தியளவில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About