சுற்றுலாத் தலமாகிய மோடி தியானம் செய்த குகை - இன்னும் என்னல்லாம் நடக்கப்போகிறதோ...மோடிஜீ...

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது....

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, மோடியின் பரிந்துரைபடி, குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

லோக்சபா தேர்தல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவும் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். 17 மணி நேரம் அவர் தியானம் செய்தார். தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குகை, இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.

பிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ரூ.3,000 என குகைக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வருகை குறைவால் சரியாக முன்பதிவு ஆகாமல் இருந்தது. தற்போது இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து தங்குவர் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About