என்னய்யா.. ஓவருக்கு 7 பால் வீசுறீங்க? அம்பயரும், சேனலும் சேர்ந்து அடித்த கூத்து! #PAKvsSA

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது. பார்த்துக் கொண்டிருந...

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இது தெரிந்தும், களத்தில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அம்பயர் சொன்னதை கேட்டு ஏழு பந்துகள் வீசினர். இதைக் கண்டு ரசிகர்களும், செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கேயும் பிரச்சனை இல்லை

முதலில் அம்பயர் அந்த ஓவரில் எத்தனை பந்துகள் வீசப்பட்டது என கணக்கிடுவதில் ஏதோ தவறு நடந்து இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அங்கேயும் பிரச்சனை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. என்ன தான் நடந்தது?

அந்த ஓவர்

இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் கிறிஸ் மோரிஸ் 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஆறு பந்துகளை வீசி முடித்தார். பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தது.

ஏழாவது பந்து

அதன் பின்னும், அம்பயர் பந்து வீச சொன்னார். கிறிஸ் மோரிஸ்-ம் அந்த ஓவரின் ஏழாவது பந்தை வீசினார். நோ பாலும் இல்லை, வைடும் இல்லை. இப்போது ஏன் கூடுதல் பந்து வீசுகிறார்கள் என அனைவரும் குழம்பினர்.

யாரும் கேட்கவில்லை

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களோ, தென்னாப்பிரிக்கா வீரர்களோ யாருமே இது குறித்து கேள்வி கேட்கவில்லை. அம்பயர் அல்லது ஸ்கோர் கணக்கிடும் நபர் தவறு செய்து இருக்கலாம் என சிலர் கூறினார்கள். ஆனால், அதுவும் இல்லை என பின்னர் தெரிய வந்தது.

சேனல் செய்த தவறு

போட்டியை ஒளிபரப்பி வரும் சேனல் தான் அந்த ஓவரின் பந்தை சரியாக கணக்கிடுவதில் கோட்டை விட்டுள்ளது. ஆறு பந்துகள் வீசி முடித்த பின்னர், அம்பயரிடம் ஐந்து பந்துகள் தான் வீசப்பட்டுள்ளது என தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பி அவரும் ஏழாவது பந்தை வீசுமாறு கூறி இருக்கிறார்.

பெரிய சொதப்பல்

இது தான் இந்த தவறுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வளவு டெக்னாலஜி இருந்தும், ஏராளமான கோணத்தில் போட்டியை வீடியோ எடுத்து லைவ்வில் ஒளிபரப்பும் நிலையிலும், ஒரு ஓவரில் எத்தனை பந்து வீசப்பட்டுள்ளது என தெரியாமல் சொதப்பியதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிப்பு இல்லை

இந்த குழப்பத்தில் நல்ல வேளையாக போட்டிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. 14வது ஓவரில் வீசப்பட்ட ஏழாவது பந்தில் பாகிஸ்தான் வீரர்கள் ரன் ஏதும் அடிக்கவில்லை. விக்கெட்டும் விழவில்லை. அதனால், அம்பயர் தலை தப்பியது.

அடிப்படை தவறு

ஏற்கனவே, அம்பயர்கள் சரியாக நோ பால் பார்ப்பதில்லை என்ற புகார் உள்ளது. இந்த நிலையில், சேனலில் சொன்னதை நம்பி அடிப்படை விஷயங்களில் தவறு செய்துள்ளார் அம்பயர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About