தும்பா திரை விமர்சனம் - வழக்கமான தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சி.

தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய ...

தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய படம் தான் தும்பா, இவை ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

டாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்கிறார் தீனா, அவருக்கு உதவியாக கனா தர்ஷனும் வருகின்றார், இவர்களுடன் வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியனும் வருகின்றார்.

அந்த சமயத்தில் தும்பா என்ற புலி வனப்பகுதியில் இருந்து தப்பிக்க, அதை ஒரு சிலர் சட்டத்திற்கு விரோதமாக பிடித்து விற்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால், இதை அறிந்த தீனா, தர்ஷன், கீர்த்தி அந்த புலியை காப்பாற்ற களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

தீனா எப்போதும் தன் ஒன் லைன் கவுண்டரில் ரசிகர்களை குஷிப்படுத்துவார், அதை தான் படம் முழுவதும் செய்கின்றார், ரசிக்கவும் வைக்கின்றார்.

தர்ஷன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றார், கனாவில் இருந்த அளவிற்கு இல்லையே பாஸ், கீர்த்தி பாண்டியனும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

புலி சம்மந்தப்பட்ட காட்சி கிராபிக்ஸ் கொஞ்சம் சுமராக இருந்தாலும், குரங்கை காட்டுவது ஏதோ கார்டூன் போல் உள்ளது, கொஞ்சம் அதை கவனித்திருக்கலாம்.

படத்தின் பின்னணி இசை கவர்கின்றது, ஒளிப்பதிவும் நன்றாகவுள்ளது, ஆனால், பாடல்கள் மனதில் நிற்காமல் போனது வருத்தம், ஏனெனில் இதில் அனிருத்தும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் வழக்கமான தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சி.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About