சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து நடிக்க வரும் முதல் பெண் வாரிசு

கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் முதன்முதலாக நடிக்க வந்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ...


கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் முதன்முதலாக நடிக்க வந்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் சாண்டல்வுட்டின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். ராஜ்குமாரின் மகன் ராகவேந்திராவின் வாரிசு வினய் தாத்தா வழியில் நடிகர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்குமார் குடும்பத்தில் ஒரு பெண் நடிக்க வந்துள்ளார். அவர் தான் ராஜ்குமாரின் மகள் வழிப் பேத்தி தன்யா ராம்குமார். தன்யாவின் தந்தை ராம்குமார் கன்னட படங்களில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார்.

வீட்டில் ஒரு நாள் புதுப்படங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நான் நடிகையானால் ஒப்புக் கொள்வீர்களா என்று தன்யா தனது தாய் பூர்ணிமாவிடம் எதேச்சையாக கேட்டுள்ளார். கண்டிப்பாக அம்மா எதிர்ப்பு தெரிவிப்பார் என்று நினைத்துள்ளார் தன்யா. ஆனால் பூர்ணிமாவோ தாராளமாக நடி, யார் வேண்டாம் என்றது என கூலாக தெரிவித்து தன்யாவை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தன் அம்மாவே பச்சைக் கொடி காட்டிய பிறகு குஷியோடு படங்களில் நடிக்க வந்துள்ளார் தன்யா. புதுமுகம் சுமன் ஜாதுகரின் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்கிறார் தன்யா. அந்த படத்தில் அவர் சுராஜ் கவுடாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

நடிகையாக வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் இருந்த தன்யாவுக்கு சுமன் கூறிய கதை மிகவும் பிடித்துவிட்டதாம். இப்படி ஒரு கதையை தான் இதுவரை கேட்டது இல்லை என்கிறார் தன்யா. கன்னட திரையுலகில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது மறைந்த தன் தாத்தா ராஜ்குமார் தான் என்று தன்யா ராம்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் பேத்தி நடிக்க வந்துள்ளார் என்று சாண்டல்வுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். தன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்கனவே நடிப்பில் அசத்திக் கொண்டிருப்பதால் தான் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் என்பதை தன்யா நன்கு புரிந்து வைத்துக் கொண்டுள்ளார். ராஜ்குமார் பேத்தி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென்று ஒரு பெயர் எடுக்க விரும்புகிறார் தன்யா. பாலிவுட்டை போன்றே கன்னட திரையுலகிலும் வாரிசுகள் வரத் துவங்கியுள்ளனர். அந்த பட்டியலில் தன்யாவும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About