நியூயார்க்கில் கட்டப்பட்ட சனீஸ்வரர் திருக்கோயில்..!

வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் என்ற அமைப்பு லாபநோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்ப்பில் அமெரிக்காவின...

வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் என்ற அமைப்பு லாபநோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்ப்பில் அமெரிக்காவின் 9 முக்கிய நகரங்களில் கோயில்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் இந்து மதம் குறித்து போதிப்பதற்கும், பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கற்பிப்பதற்கும் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இதன்மூலம் ஆன்மிக சிந்தனைகளை அடுத்து வரும் சந்ததியினருக்கு கடத்தப்படும் என்பது அந்த அமைப்பின் நோக்கம்.

மொத்தமாக அமெரிக்காவில் அமையவுள்ள 9 நவகிரக கோயில்களில், முதலாவதாக நியூயார்க்கில் சனீஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவை தாண்டி, வெளிநாட்டில் சனீஸ்வரருக்கு கட்டப்பட்ட முதல் கோயில்.

ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் அமைப்பு வடஅமெரிக்காவில் அடுத்தடுத்து அமையவுள்ள 9 நவகிரக கோயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனீஸ்வரருக்கு நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு அதிகளவிலான தமிழர்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About