அனுபவம்
நிகழ்வுகள்
இதெல்லாம் செய்துவிட்டு.. வெற்றிக்கு ஆசைப்பட்டால் எப்படி.. ஆப்கானுக்கு எதிராக கோலி செய்த 3 தவறுகள்!
June 22, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த மூன்று தவறுகள் இந்திய அணியை தோல்வியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கிறது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோசமாக திணறி வருகிறது. இந்திய போட்டியில் ஆப்கானிடம் இந்தியா தோல்வி அடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
முக்கியமாக இந்திய பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டுப்படுத்திய அளவிற்கு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்களை கட்டுப்படுத்தவில்லை.
இலக்கு என்ன
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர். இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான்.
கோலி செய்த தவறு
இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலி செய்த முக்கியமான மூன்று தவறுகள் தற்போது இந்திய அணிக்கு எதிராக முடிந்து இருக்கிறது. அதில் முதல் தவறு இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல கோலி இப்படி செய்தார். ஆனால் இந்த பிட்ச் சேஸ் செய்ய வசதியான பிட்ச் என்பதை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்னொரு தவறு
அதேபோல் இந்திய அணியில் விஜய் சங்கரை மீண்டும் எடுத்தது பெரிய தவறு என்று எல்லோரும் தெரிவித்து வருகிறார்கள். விஜய் சங்கர் சென்ற போட்டியில் சரியாக ஆடவில்லை. இந்த போட்டியிலும் அவர் சரியாக ஆடவில்லை. சென்ற போட்டியில் எடுத்த 2 விக்கெட்டை கூட இந்த போட்டியில் அவர் எடுக்கவில்லை . ஆனால் அவரை ஏன் எடுத்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
கடைசி தவறு
அதேபோல் இந்திய அணியில் முதல் பவர்பிளே வரை ஸ்பின் பவுலர்கள் பந்து வீசவே இல்லை. ஆனால் இந்திய அணியை ஸ்பின் பவுலிங்கை வைத்துதான் ஆப்கானிஸ்தான் அணி கட்டுப்படுத்தியது. இது ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச் ஆகும். அதை செய்ய கோலி தவறி விட்டார். முக்கிய குல்தீப் யாதாவிற்கு அவர் ஓவர் கொடுக்காமல் காலம் தாழ்த்தியது பெரிய சர்ச்சையானது

0 comments