சர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?

இயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்...

இயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் சென்றாலும் உடல் நலம் குறித்த சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். அது நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளாக கூட இருக்கலாம். ஆனால் அந்த மாதிரியான சமயங்களில் மருந்து மாத்திரைகள் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?


அதிலும் டயாபெட்டீஸ் போன்ற நீரிழிவு நோயாளியாக நீங்கள் இருந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக நிலைமை மோசமாகி விடும். இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் நிலைமை சமாளிக்க இயற்கையான சில வழிகளை நீங்கள் கையாள முயலலாம். அதைப் பற்றித் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம். உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறையும் போது இந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் செய்யலாம்.

உடற்பயிற்சி மற்றும் நீர்ச்சத்து

உங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. இது உங்கள் உடம்புக்கு போதுமான இன்சுலின் சுரப்பை கொடுக்கும். நீங்கள் சிறியதாக சிற்றுண்டி சாப்பிட்டால் கூட சுகர் இல்லாத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதே நேரத்தில் இயற்கை பேரழிவு சமயத்தில் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் முக்கியம். நீங்கள் சோர்வாக இருந்தால் கூட கொஞ்சம் ஆற்றலை வரவழைத்து கொண்டு நிலைமையை சமாளியுங்கள்.

இரத்த சர்க்கரையை எப்படி குறைப்பது?

டைப் 2 டயாபெட்டிஸில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க நிறைய இயற்கை வழிகள் உள்ளன. ஆனால் இந்த வழிகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து கொள்வது நல்லது.

ஆல்பா லிப்போயிக் அமிலம்

இந்த அமிலம் உணவுப் பொருட்களான கல்லீரல், கீரைகள், பிரக்கோலி மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றில் காணப்படுகிறது. 200-300 மில்லி கிராம் என்ற அளவில் ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கன் ஜின்செங்

3 கிராம் ஜின்செங்கை நீங்கள் எடுத்துக் கொண்டாலே போதும் இரண்டு மணி நேரத்தில் இரத்த சர்க்கரை அளவை குறைத்து விடலாம். 3 கிராம் அளவு மாத்திரை வடிவிலோ (1 டீ ஸ்பூன் அல்லது 1டீ பேக் கொண்டு 1 கப் டீ தயாரித்து குடித்து வரலாம்).

ஜின்செங் டீ ரெசிபி

கொஞ்சம் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதில் 5-8 துண்டுகள் ஜின்செங் போட்டு கொதிக்க வையுங்கள். 4-5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி குடியுங்கள்.

கொக்கினியா இண்டிகா

1 கிராம் பாவைக்காய் அல்லது 2 அவுன்ஸ் பாவைக்காய் சாறு எடுத்து குடித்து வரலாம். இதுவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

குரோமியம் மற்றும் பூண்டு கூட இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.

இந்த மாதிரியான சில இயற்கை முறைகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About