ஆஹா, இது அதுல்ல.. பிகில் படத்தின் மொத்த கதையும் தெரிஞ்சி போச்சே!

பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்...

பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்பந்துடன் பின்னால் ஒரு விஜய் நிற்பதைப் போலவும், அதில் காட்சி இடம் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் பிகில் என்றும், இன்றுதான் அறிவிக்கப்பட்டது.

பிகில் படத்தின், முதல் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. லுக்கை பார்த்தவர்களுக்கு பல படங்களின் சாயல் தெரிந்தது என்னவோ உண்மை.

காலா வேட்டி

உதாரணத்திற்கு, உட்கார்ந்திருக்கும் விஜய் அணிந்துள்ள காவி வேட்டி, சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் திரைப்படமான காலாவின் பர்ஸ்ட் லுக்கை போலவே காணப்பட்டது. இதில் இரு விஜய் காணப்படுவதையும், அதில் ஒருவர் தாதா போலவும், இன்னொருவர் விளையாட்டு பிள்ளை போலவும் காணப்படும் லுக்கை பார்த்தால், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்பட பாணியும் தென்பட்டது.

தேவர் மகன்

தேவர்மகன் திரைப்படத்தில், சிவாஜிகணேசன், ஊரில் பெரிய தலக்கட்டு. மற்றொரு பக்கம், அவரது சகோதரர் மகன் நாசர் பெரிய தலக்கட்டு. இப்படியாக இரு கோஷ்டிகளும் ரத்தம் சிந்த சிந்த வெட்டிக்கொள்வார்கள். ஆனால், சிவாஜி மகன் கமல்ஹாசன் கதாப்பாத்திரமோ, ஹாயாக ஹீரோயினுடன் சுற்றித் திரிந்து, தான் விரும்பியபடி வாழும் கேரக்டர். ஒருகட்டத்தில், சிவாஜி இருந்த இடத்துக்கே கமலும் வரக்கூடிய சூழ்நிலை எழும்.

பலே அட்லி

இப்போது பிகில் பட போஸ்டரை பார்த்தாலும், அதே கதைதானோ என்ற சந்தேகம் வருகிறது. ஹிட் படங்களை பாலீஷ் செய்து ஹிட் அடிப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் அட்லி. மவுனராகம்-ராஜா ராணி, சத்திரியன்-தெறி, அபூர்வசகோதரர்கள்-மெர்சல் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அட்லியை பற்றி சொல்வது யாவரும் அறிந்ததே.

நல்லா கொடுப்பாரு

இந்த நிலையில்தான், தேவர்மகன் போலவே, பிகில் படமும் உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது பர்ஸ்ட் லுக் போஸ்டர். எந்த படத்தோட 'இன்ஸ்ப்பிரேஷனாக' இருந்தாலும், அதை மறுபடியும், நல்ல ரைமிங்கோடு, டைமிங்கோடு படமாக்கி ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் வல்லவர் அட்லி. எனவே, வீ டோன்ட் கேர். விஜய் படம்னா கொண்டாடுவோம் என்ற மனநிலையில்தான் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About