ராத்திரியில் ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. காலையில் விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே!

ராத்திரி ஆயிடுச்சுன்னா ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. பொழுது விடிஞ்சா அதை விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே.. இப்படி கடத்தி விற்பது கன்னு...

ராத்திரி ஆயிடுச்சுன்னா ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. பொழுது விடிஞ்சா அதை விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே.. இப்படி கடத்தி விற்பது கன்னுக்குட்டியைதான்!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீர் திடீரென கன்றுக்குட்டிகள் காணாமல் போயின. யார் திருடுகிறார்கள் என்றே தெரியாமல் மக்கள் குழம்பினர்.

இதை வைத்துதான் பிழைப்பை நடத்துவதால், வேறு வழி இல்லாமல் போலீசில் புகார் சொன்னார்கள். போலீசும் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தது.

மர்ம நபர்கள்

அப்போது, ஷேர் ஆட்டோவில்தான் அந்த மர்மநபர்களை கண்டுபிடித்தார்கள். ராத்திரி நேரங்களில் ஷேர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு, கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. குறிப்பாக அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில்தான் இது அதிகமாக நடந்து வந்திருக்கிறது.

ஆட்டோ

இதையடுத்து, இன்று காலை அம்பத்தூர் புதூர் பகுதியில் கன்று குட்டியை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கினர். அவர்கள், இருவரும் பைக்கில் தப்ப முயன்றனர். பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி பறந்தனர். ஆனால் நம்ம போலீஸ் விடவில்லையே.. இவர்களும் ஒரு ஆட்டோவை பிடித்து ஏறி கொண்டனர்.

மிரட்டல்

2 கிலோ மீட்டர் தூரத்துக்கு திருடர்களை விரட்டி சென்று பிடித்தனர். அப்போதும் அந்த 2 பேர் ஆளுக்கொரு கத்தியை காட்டி மிரட்டி, இன்னொரு ஆட்டோவை பிடித்து தப்ப முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் 2 திருடர்களையும் துரத்தி சென்று பிடித்தனர்.

ஆட்டுக்கறி

ரொம்ப நேரத்துக்கு ஒரே சேஸிங்தான்.. பிடிபட்ட அந்த நபர்களை மாடு உரிமையாளர்கள் எல்லாரும் சேர்ந்து தர்மடி கொடுத்தனர். ஒருவர், சென்னையை சேர்ந்த ஹர்த்துள் கான் என்பதும், இன்னொருவர் அவரது கூட்டாளி என்பதும் தெரியவந்தது. இவர்களது வேலையே, கன்றுகுட்டிகளை ராத்திரியில் கடத்தி, அதை ஆட்டுக்கறி என்று இறைச்சியாக ஓட்டல்களில் விற்பதுதானாம். இதனாலேயே ஆடு போலவே உள்ள கன்றுக்குட்டிகளை தேடி திருடுவார்களாம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About