தர்ம பிரபு - சினிமா விமர்சனம் - புதிய பானையில் பழைய சோறு. ஆனால் புளித்து போன சோறு.

கதை: எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் ...

கதை:

எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்பட, எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

விமர்சனம்:

 யோகி பாபு முதல் முறையாக முழு நீள கதாநாயகனாக நடித்திருக்கும் படம். எமதர்மன் வேடம். வடிவேலுவை பின்பற்றி அவர் நடித்த ராஜா கதை போல், இது எமதர்மனின் ஆட்டம். யோகி பாபுவின் பலம், இடையில் அவர் அடிக்கும் டைமிங்க் காமெடி வசனங்கள், அதே போல் அவரது ஸ்லாங்க், வறண்டு கிடக்கும் தமிழ் சினிமாவின் காமெடி பஞ்சத்தில் யோகிபாபு திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இதையெல்லாம் நம்பித் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் திரைக்கதை ஃபேண்டஸி என்றாலும், அதில் அழுத்தமான ஒரு பின்னணி இருக்க வேண்டும். அது தான் ரசிகர்களை உள்ளிழுக்கும். ஆனால் இதெல்லாம் படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்க். எமன் வேடத்தில் யோகிபாபு, தற்போதைய அரசியல் கலாய்ப்பு, இதை மட்டுமே நம்பி படமெடுத்துள்ளார்கள். அது சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறது. பல இடங்களில் எரிச்சல். கதையிலோ காட்சிகளிலோ எந்தப் புதுமையும் இல்லை.

தமிழிலேயே இருக்கும் பல பழைய படங்களின் காட்சிகள் ரிப்பீட் ஆகிறது. அதே போல் பெரிய ஹீரோ முதல் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் அறிவுரை, வாட்ஸ்-அப் பொன்னுரைகள் எல்லாம் வழக்கம்போல் காட்சிகளாய் இதில் விரிகிறது.

படத்தில் விடுபட்ட இரண்டு விஷயம் இளைஞர்கள், ஜல்லிக்கட்டு. மற்ற அனைத்தும் படத்தில் இருக்கிறது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், அன்புமணி, ராமதாஸ், விவசாயி மட்டுமில்லாமல் பெரியார் முதல் அன்னை தெரசா வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் அதில் காமெடிதான் இல்லை.

யோகிபாபு முதல்முறை நாயகன். அதை உணர்ந்து செய்திருக்கிறார். அவருக்கு எது வருமோ, அதை சரியாக செய்திருக்கிறார். காமெடி டைமிங்கிலும், உடல்மொழியிலும் அசத்துகிறார். ஆனால் படத்தில் அவரும் ரமேஷ் திலக் மட்டுமே கவர்கிறார்கள். ராதாரவி முதல் அனைத்து அனுபவமான நடிகர்களுமே இதில் ஏனோ சொதப்பி இருக்கிறார்கள்.

இயக்குநர் முத்துக்குமரன் நண்பர் யோகிபாபுவை கச்சிதமாக காட்டியிருக்கிறார். ஆனால் மற்றதில் கோட்டை விட்டிருக்கிறார். காமெடி என நினைத்து எழுதப்பட்டவை அ   னைத்தும் அழுகை வரவைக்கிறது. திரைக் கதையில் இன்னும் கவனம் கொண்டிருக்கலாம். எமலோகத்தை விட்டு பூமியில் வில்லனாக அலையும் பெருமாளின் கதை ஒன்று வருகிறது. கொஞ்சமும் கவன ஈர்ப்பு இல்லாத கதை. மொத்ததில் படம் படுபோர்.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் மூவரும் தங்கள் வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள். செட் பல இடங்களில் செட் எனத் தெரிகிறது. ஆனால் அது உறுத்தவில்லை.

பலம்:

 யோகி பாபு, ரமேஷ் திலக் காமெடிகள்

பலவீனம்:

திரைக்கதை, பழைய காட்சிகள்

ஃபைனல் பஞ்ச்:

புதிய பானையில் பழைய சோறு. ஆனால் புளித்து போன சோறு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About