தமிழ்நாட்டை சோகத்தில் மூழ்க வைத்த மரண சம்பவம்! கோபத்தில் பொங்கிய பிரபல இயக்குனர்

தமிழகம் முழுக்க தற்போது இளம் தலைமுறைகள் மட்டுமல்ல பல பெற்றோர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காரணம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூ...

தமிழகம் முழுக்க தற்போது இளம் தலைமுறைகள் மட்டுமல்ல பல பெற்றோர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காரணம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சோகம் சூழ்ந்துள்ளது.

அண்மையில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 51%-க்கும் மேற்பட்ட சுமார் 75,000 தமிழக மாணவ, மாணவியர் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

ஏற்கனவே அனிதா என்ற மாணவி இதே போல கடந்த ஆண்டிற்கு முன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தற்போது மேலும் தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.

அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் ரஞ்சித் தற்போது கோபத்துடன் நீட் தேர்வை எதிர்த்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About