அப்துல் ஹமீது- அதைப்பார்த்து எனக்கு கொஞ்சம் நெஞ்சம் வலித்தது

பாட்டுக்கு பாட்டு என்று சொன்னதும் 90களில் இருந்தவர்களுக்கு ஒருவரின் முகம் நியாபகம் வரும். அவரே நம்மை எல்லோரையும் தமிழ் உச்சரிப்பின் மூலம் க...

பாட்டுக்கு பாட்டு என்று சொன்னதும் 90களில் இருந்தவர்களுக்கு ஒருவரின் முகம் நியாபகம் வரும். அவரே நம்மை எல்லோரையும் தமிழ் உச்சரிப்பின் மூலம் கவர்ந்த அப்துல் ஹமீது அவர்கள்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் பாடல் நிகழ்ச்சியில் பயிற்சியாளராக இருக்கிறார், இந்த தகவலை நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். பாடல் நிகழ்ச்சி குறித்தும் தனது தொலைக்காட்சி பயணம் குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர், ஏ.ஆர். ரகுமான் அவர்களை முதன்முதலாக பேட்டியடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது, பொங்கல் ஸ்பெஷலாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.

இந்த நிகழ்ச்சி ஏன் எடுக்க ஒப்புக்கொண்டேன் என்றால் ஏ.ஆர். ரகுமான் வளர்ச்சி, முதல் படத்திலேயே தேசிய விருது, மிகப்பெரிய வரவேற்பு இருந்த போது அவரை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் வந்தது.

ஜென்டில்மேன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை என்று அருவருப்பான முறையில் விமர்சனம் எழுதினார்கள், அதைப்பார்த்து என் நெஞ்சம் வலித்தது.

அவரை பற்றிய விமர்சனங்களை தவர்க்க வேண்டும் என்று அவரிடம் பேட்டி கொடுக்க கேட்டேன். முதலில் மறுத்த அவர் பின் ஏ.ஆர். ரகுமான் ஒரு புதிர் என்ற தலைப்பை கேட்டதும் ஒப்புக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு எல்லாம் ஆனது, இப்போது கூட யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.

என் வாழ்க்கையில் பலரை பார்த்துள்ளேன், 1993ம் ஆண்டு கண்ட அதே ரகுமானாக இப்போதும் அவரை பார்க்கிறேன். எத்தனை புகழ் வந்தாலும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல உதாரணம் ஏ.ஆர். ரகுமான் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About