இங்கிலீசு லவுசு Engleesu Lovesu Lyrics தனுஷ் பாடியுள்ள பாடல்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு - ஆங்கிலப் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்'. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்கா...






தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு - ஆங்கிலப் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்'. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜக் வார்ட்ரோபின், 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் காமெடி படமாம்.

தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியானது. சமீபத்தில் பல நாடுகளில் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்றது.

இந்தநிலையில் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆப் தி பகிர்' படத்தை தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை முதலில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தான் வெளியிடுவதாக இருந்தது. தற்போது, தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ஓராண்டுக்கு எந்தப்படத்தையும் வெளியிடாமல், தயாரிக்காமல் இருப்பது என முடிவெடுத்துள்ளார். இதன்காரணமாக 'ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷ், இங்கிலீசு லவுசு என்றொரு மெலோடி பாடலை பாடியிருக்கிறார். மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியிருக்கிறார். தனுஷ் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக தனுஷின் பாடல்களுக்கு யு-டியூப்பில் நல்ல வரவேற்பு இருக்கும்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About