ராஜராஜ சோழன் ஆட்சி தான் இருண்ட ஆட்சி! – பா.ரஞ்சித் பேச்சால் ரணகளமான வலையுலகம்

கும்பகோணம் அருகில் உள்ள திருப்பணந்தாள் கடை வீதியில் நீலப் புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவு நாளில் இயக்குநர் ரஞ்சித் பேசியது பெரும்...

கும்பகோணம் அருகில் உள்ள திருப்பணந்தாள் கடை வீதியில் நீலப் புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவு நாளில் இயக்குநர் ரஞ்சித் பேசியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உண்மையில் ராஜராஜ சோழன் பற்றி அவர் பேசியது சில வார்த்தைகள்தான். அதைவிட பெரிதாக அவர் பேசியது மடங்களின் வசமுள்ள நில மீட்பு பற்றியதுதான். இதனால்தான் இந்து அமைப்புகள் பலவும் ரஞ்சித் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளன.

“15 லட்சம் ஹெக்டேர் பாசன நிலங்களைக் கொண்ட டெல்டா பகுதியில் தலித்கள் மட்டுமல்ல, உழைக்கும் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏன் நிலமற்றவர்களாக ஆனார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. நில உச்ச வரம்புச் சட்டம் எல்லாரையும் கட்டுப்படுத்தியது. ஆனால் இங்குள்ள மடங்களை மட்டும் கட்டுப்படுத்தவில்லை. இங்குள்ள மடங்களிடம் மட்டுமே 40000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் யாருக்குப் பாத்தியதை? யார் பயன்படுத்துகிறார்கள்? நாம் ஏன் நிலமில்லாமல் போனோம்?

இங்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள தலித்துகளின் பிரச்சினையே நிலத்தின் அடிப்படையில்தான். நிலத்தின் அடிப்படையில்தான் இங்கு மிகப் பெரிய சுரண்டல்கள், தீண்டாமை நடந்துள்ளது. நிலத்தை இழந்தவர்கள் இங்கு உரிமையற்றவர்களாகிவிட்டார்கள்.

உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டும், அனைவரும் தமிழராக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் இங்கிருக்கும் மடங்களிலிருக்கும் நிலங்களை எங்களுக்குத் திருப்பித் தர முடியுமா? இந்த மடங்களின் வசமிருக்கும் 40 ஆயிரம் நிலங்களை எங்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? காரணம் நிலம்தான் இங்கு அனைத்துப் பிரச்சினைக்குமான காரணம். மற்ற மாநிலங்களில் நில உச்ச வரம்புச் சட்டத்துக்குள் அடங்கிய மடங்கள், தமிழ் நாட்டில் மட்டும் ஏன் அடங்கவில்லை.

இங்கிருக்கிற மடங்களின் நிலங்களை எங்களுக்கு எப்போது வாங்கித் தருவீர்கள்.. ஏன் என்றால் இது எங்களின் நிலம். எங்களிடமிருந்து பறிக்கப்பட்டவை. பல்வேறு காரணங்கள், முறைகளைச் சொல்லி பறிக்கப்பட்டவை. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும் நாங்கள் இன்னும் உங்களை நம்புகிறோம். உங்களைக் கைவிடாமல் இருக்கிறோம். இந்தத் தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது யாரால… தலித்களின் வாக்குகள் மிகக் கணிசமாக திமுகவுக்குத்தானே விழுந்தன. இன்னமும் உங்களைத்தானே நம்புகிறோம். தயவு செய்து எங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.”

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About