செவன் - திரைவிமர்சனம்

நான் அவன் இல்லை பாணியில் தற்போது வந்துள்ளது செவன் படம். ஒரு ஆண், ஆறு பெண்கள் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் இந்த செவன் படம். கதை: ஐடி நிறுவ...

நான் அவன் இல்லை பாணியில் தற்போது வந்துள்ளது செவன் படம். ஒரு ஆண், ஆறு பெண்கள் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் இந்த செவன் படம்.

கதை:

ஐடி நிறுவனனத்தில் பணியாற்றிவரும் நந்திதா உடன் பணியாற்றும் ஹீரோ ஹவிஷை காதலிக்க துவங்குகிறார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர். ஆனால் திடிரென ஹவிஷ் காணாமல் போகிறார். அதனால் நந்திதா போலீசில் புகார் கொடுக்கிறார்.

போலீஸ் அதிகாரி ரகுமானிடம் அவர் நடந்ததை கூறுகிறார். அப்போது தான் தெரிகிறது இதுபோல வேறு சில பெண்களும் ஹவிஷ் பற்றி புகார் கூறியுள்ளனர் என்று. தலைமறைவாக இருக்கும் ஹவிஷை போலீஸ் தேடி கண்டுபிடிக்கிறது.

ஆனால் தன் மீது புகார் கூறியுள்ள பெண்களை யாரென்றே தெரியாது என்கிறார் ஹவிஷ். இடையில் ஒரு கொலைப்பழியும் அவர் மீது விழுகிறது. பெண்களை ஏமாற்றியது யார்? கொலை செய்தது யார்? - கேள்விக்கு மீதிப்படம் பதில் சொல்கிறது.

க்ளாப்ஸ் மற்றும் பல்ப்ஸ் :

படத்தின் கதை சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்தாலும் திரைக்கதையில் தெளிவு அதிகம் இல்லை. நான் அவன் இல்லை படம் போல ஆரம்பித்து பின்னர் கிரைம் த்ரில்லர் படமாக முடிகிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லாக வைத்திருந்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

ஆனால் படத்தின் பல சீன்கள் லாஜிக் இல்லாமலும் நம்பமுடியாத அளவுக்கு தான் இருந்தன. ஒரு நபர் காணாமல் போனதாக இரு பெண்கள் அளித்த புகாரை தேசிய சேனல்களில் தலைப்பு செய்தியாகவும், இரண்டு நாலா காணாமல் போன ஒரு நபர் பற்றி ஊர் முழுக்க போலீஸ் போஸ்டர் ஓட்டி பரபரப்பாக தேடுவது போல காட்டுவதெல்லாம் நம்பும் அளவுக்கு இல்லை.

படத்தின் முதல் பாதி போர் அடித்தாலும், படத்தின் கடைசி அரை மணி நேரம் சற்று ஆறுதல்.

தெலுங்கு ஹீரோ அவிஷ் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான். படத்தில் பல நடிகைகள் இருந்தாலும் ரெஜினாவுக்கு தான் பெரிய ரோல். மிரட்டியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About