சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா?

சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவி...

சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவின் தென்துருவப் பகுதியைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள இருக்கிறது.

ஜூலை 15 ஆம் ஆததி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அது இன்று மதியம் வெற்றிகரமான சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அந்த சந்திராயன் 2 பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

திடீர் நிறுத்தம்

ஜூலை 15 ஆம் தேதி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 விண்ணில் செலுத்துவதற்குத் தயாராக இருந்த நிலையில் செலுத்துவதற்கும் 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இன்று ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் வேறொரு தேதியில் செலுத்தப்படும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

டுவிட்டர் பதிவு

சந்திராயன் 2 விண்கலத்தைப் பற்றி டுவிட்டர் பதிவில் இஸ்ரோவில் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில், 100 கோடி கனவுகளை நிலவுக்குச் சுமந்து செல்ல சந்திராயன் 2 தயாராக இருக்கிறது என்று இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறது.

ஜிஎஸ்எல்வி மார்க்3

ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்னும் செலுத்து வாகனத்தினில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு இருக்கிறது. அதுதான் இந்த ஏவுகணையை சுமந்து செல்லும் வாகனமாக விளங்குகிறது.

மூன்று பாகங்கள்

சந்திராயன் 2 என்னும் ஆராய்ச்சி விண்கலம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அதாவது நிலவைச் சென்றடைந்தவுடன் நிலவைச் சுற்றி வருவதற்கான கலன் ஒன்றையும் நிலவில் சென்று தரையிறங்கும் கலன் ஒன்றாகவும் நிலவுக்கு ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் ரோவர் கலன் ஒன்றும் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

பெயர்கள்

நிலவைச் சுற்றி வரும் கலனை அடுத்து, நிலவில் தரையிறங்கும் கலனுக்கு விக்ரம் என்றும் அதற்குள் ஊர்ந்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் கலனை பிரக்யான் ரோவர் (உலாவி) என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இது எவ்வளவு உயரம்?

இந்த சந்திராயன் 2 விண்கலம் எவ்வளவு உயரமானது என்பது பற்றிய தகவல் தெரியுமா உங்களுக்கு?... இந்தியா உருவாக்கத்தியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த பெரிய விண்கலம் இதுதான். கிட்டதட்ட 640 டன் எடை கொண்டது. 44 மீட்டர் அதாவது 144 அடி உயரம் கொண்டது. ஏறத்தாழ 14 மாடிக் கட்டடத்தின் உயரம் கொண்டது அந்த விண்கலம்.

நிலவுப்பயணத் திட்டம்

இந்தியாவுக்கு நிலவுப் பயணம் கனவாக இருந்த சமயத்தில் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு தான் அது நிறைவேறத் தொடங்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் நிலவுப் பயணத்திட்டமான சந்திராயன் 1 ஐ விண்ணில் ஏவியது. நிலாவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய ஆய்வு உண்மை தான் அது.

எவ்வளவு செலவானது?

கிட்டதட்ட 150 மில்லியன் டாலர் செலவில் இந்த சந்திராயன் 2 உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திராயன் 2 திட்டம் என்பது நிலவில் தண்ணீர் மற்றும் தாதுப் பொருள்கள் இருக்கிறதா என்றும் பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவது போல நிலவில் நிலவுநடுக்கம் ஏற்படுமா என்றும் எப்படி இருக்கும் என்பது பற்றிய உண்மைகளை அறிய உதவும்.

இந்தியா முதல் இடம்

இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், நிலவின் தென்துருவப் பகுதியில் கால் பதிக்கும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை உண்டாகும்.

எப்போது போய் சேரும்?

கிட்டதட்ட 3.84 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கவிருக்கிறது இந்த விண்கலம். இதன் முதல் பகுதி நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7 தேதி சென்றடையும். கலன் பிரிவதில் இருந்து தரையிறங்கும் 15 நிமிடம் தான் விஞ்ஞானிகளுக்கான மிகப்பெரிய சவாலாக அமையும்.

எத்தனை நாள்?

கிட்டதட்ட இந்த விண்கலம் மொத்தமாக 48 நாட்கள் வரை விண்ணில் தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்ளப் போகிறது. நிச்சயம் இந்தியாவின் சந்திராயன் 2 கனவு நிறைவேறும். இந்தியாவுக்குப் பெருமைத் தேடித்தரும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About