ரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ..!! அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்

பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில்...

பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கான அணியை தேர்வு செய்ய தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான குழு கூடியது.

அதற்கு முன்னதாக, தேர்வுக் குழுவினருக்கும், கேப்டன் கோலிக்கும் இடையில் முக்கிய ஆலோசனை நடந்தது. அதன் பின்னர், 3 வகையான போட்டிகளுக்கான தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டது.

கோலி தான் கேப்டன்

டெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட அணி, 3 ஒருநாள் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணியில் 3 டி20 போட்டிகளுக்கு 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப் பட்டது. அனைத்து அணிகளுக்குமே கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாண்டியாவுக்கு ஓய்வு

ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் ஆடுவார்.

தேர்வுக்குழு கருத்து

இந் நிலையில் அணியை அறிவித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத். அப்போது தோனி பற்றியும் பேசினார். அவர் கூறியதாவது:

விளையாட மாட்டேன்

தோனி எங்களிடம் இந்த தொடருக்கு முன்னதாக பேசினார். இந்த தொடரில் ஆட மாட்டேன் என்றும் கூறினார். அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கிறோம். அதனால் அவரை விட்டுவிட்டு மற்ற வீரர்களை வைத்து அணியை தேர்வு செய்தோம்.

திட்டங்கள்

அடுத்த உலக கோப்பைக்கு நாங்கள் தற்போது தயாராக வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களை தீட்டி வருகிறோம். தோனி இல்லாத நேரத்தில் ரிஷப் பன்ட் அனைத்து வகையான போட்டிகளிலும் கீப்பிங் செய்வார். அதுவே தற்போதைய திட்டம்.

தோனிக்கு தெரியும்

தோனி போன்ற ஒரு ஜாம்பவானுக்கு, எப்போது ஓய்வு பெறவேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நாம் அவரிடம் பேசக்கூடாது. ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம்.

தலையீடு இல்லை

தோனி எப்போது வேண்டுமானாலும் அணியில் இருந்து ஓய்வு பெறலாம். அதில் நாங்கள் தலையிடுவது இல்லை என்றார். ஆனால், தோனியை அணியில் எடுக்கப் போவதில்லை என்று முன்பே முடிவெடுத்து, அதை தோனியிடம் பிசிசிஐ தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிசிசிஐ நெருக்கடி

மேலும், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விடுங்கள், அப்போது தான் நன்றாக இருக்கும் என்று நெருக்கடி கொடுத்தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், எதற்கும் மசியாமல் தமது பாராமிலிட்டரி பணியை முன் வைத்து 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை அறிவித்துவிட்டார் தோனி என்றும் கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About