நம்பகமான கரன்ஸியா ஃபேஸ்புக் ‘லிப்ரா’?

ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ள ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸி நம்பகத்தன்மை உடையதுதானா என்ற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண...

ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ள ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸி நம்பகத்தன்மை உடையதுதானா என்ற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பணப் பரிவர்த்தணை இனிமேல் டிஜிட்டல் பணப் பரிமாற்றமாக மாறும் என்ற அறிவிப்புடன் அறிமுகமானது பிட்காயின். உலக நாடுகளும் பொதுத்துறை வங்கிகளும் இந்த எலெக்ட்ரானிக் பணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டன. ஆனால், இன்று உலக நாடுகள் பல பிட்காயினை தடை செய்துள்ளன.

சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2019-ம் ஆண்டில் ஃபேஸ்புக் டிஜிட்டல் கரன்ஸியான ‘லிப்ரா’ குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பணம் அல்லது கரன்ஸி என்பது ஒரு நாட்டின் அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை வங்கி ஒன்றே அறிமுகம் செய்யும். ஆனால், ஒரு தனியார் நிறுவனமான ஃபேஸ்புக், புதிதாக ஒரு கரன்ஸியை உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவானதாக அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுவே நம்பகத்தன்மையைக் கேள்விகுறியாக்கும் முதல் அடிப்படை விஷயம். இரண்டாவதாக, லிப்ரா என்னும் டிஜிட்டல் கரன்ஸியை ஆளப்போவது தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் முதலாளிகள் கொண்ட ஒரு மிகப்பெரும் குழு. இந்தக் குழுவில் தற்போதைய சூழலில் மாஸ்டர்கார்டு, பேயூ, பேபால், வோடஃபோன், ஸ்பாட்டிஃபை, ஈபே, உபெர் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களின் பங்களிப்புடன் நிதி நிறுவனங்களும் டெக் நிறுவனங்களும் இணைந்து இந்த க்ரிப்டோகரன்ஸியை கையாள்வார்கள். இந்த லிப்ராவைப் பயன்படுத்த ‘கேலிப்ரா’ என்ற வாலெட் பயனாளர்களுக்கு வழங்கப்படும். இந்த வாலெட் ஃபேஸ்புக், மெசெஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமே பேமண்ட் முறைகள் மேற்கொள்ளப்படும்.

2020-ம் ஆண்டுதான் அறிமுகமாகிறது என்றாலும், லிப்ராவுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. ஜெர்மன் நாடாளுமன்றத்தில் லிப்ராவின் சாதகம் பாதகம் குறித்து ஒரு பெரும் விவாதமே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About