என்னடா இது புதுசா இருக்கே? விஜய் சேதுபதியை விட யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூலா?

ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்...

ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்கினார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மகாநடிகன் என்று பாராட்டப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தன்னை திருநங்கையாக காட்டிய விஜய் சேதுபதிக்கு இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூலில் அப்படி ஒன்றும் இல்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் வெளியாக வேண்டிய சிந்துபாத் தொடர்ந்து பல சிக்கல்களை கடந்து ஜூன் 27ம் தேதி திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சிட்டியில் ரூ.1.26 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது.

பொதுவாக வசூலில் கில்லாடி என்று கூறப்படும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது. கதையை தேர்ந்தெடுப்பதில், கோட்டைவிடுகிறாரா? இல்லை ஹீரோ ரோல் செட்டாகவில்லையா? இல்லையென்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கவனம் செலுத்துவதால் ஹிட் கொடுக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இப்படத்திற்கு போட்டியாக வெளியான காமெடி நடிகர் யோகி பாபுவின் தர்மபிரபு படம் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. ஆம், எந்தவொரு காமெடி நடிகர் ஹீரோவானாலும், மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு முன்பு வெறும் டம்மியே என்று கூறப்பட்ட நிலை தற்போது மாறியுள்ளது. ஆம், கடந்த 28ம் தேதி வெளியான தர்மபிரபு தமிழகத்தில் மட்டும் ரூ.6 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. செங்கல்பட்டு பகுதிகளில் மட்டும் ரூ.1.15 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலை மையப்படுத்திய தர்மபிரபு படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆத்திரத்தில் இப்படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வாகவும் பதிவிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால், இப்படத்தின் வசூலும் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எப்போதும் புதிய படங்களுக்கு கடும் சவாலாகவும், போட்டியாகவும் இருப்பது தமிழ் ராக்கர்ஸ் தான். இப்படம் தமிழ் ராக்கர்ஸ்ல் வருவதற்கு முன்னர் ஃபேஸ்புக்கில் வந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

யோகி பாபு நடிப்பில் அடுத்து கூர்கா, கொரில்லா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து, ஜெயிக்கிற குதிர, 100% காதல், பிகில், எஸ்கே16, ஹீரோ, அசுர குரு, ஜகஜால கில்லாடி, கோமாளி, ஜடா, அசுரன், தர்பார், பன்னி குட்டி, ஜாம்பி, அடங்காதே, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இதே போன்று விஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், சாயிரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன், மார்கோனி மதை, உப்பென்னா, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About