அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
June 22, 2017அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். த்ரிஷா இல்லன்னா ந...
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரேயா, தமன்னா நாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படம் இன்று காலைதான் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக இப்படத்தை பார்த்த லண்டன் விமர்சகர் ஒருவர் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
இதில் சிம்பு மைக்கேல் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளாராம். அஸ்வின் தாத்தா அழகாக உள்ளதாம். மூன்றாவது கதாபாத்திரத்திற்காக 200 சதவீதம் உழைப்பை போட்டுள்ளாராம்.
இடைவேளை செம மாஸாக உள்ளதாம். அதேபோல் க்ளைமேக்ஸ் காட்சியிலும் 10 நிமிடம் சர்ப்ரைஸாக இருக்குமாம்.
நெகட்டிவ் பாயிண்டுகள் ஏதும் இல்லாமல் கூறியுள்ளனர். இதை தன்னுடைய சிம்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இன்று காலை நமது சிறப்பு விமர்சனம் விரைவில் நமது தளத்தில் பதிவிடப்படும்.
'அரசியலுக்கு வருகிறார் ரஜினி: திட்டங்கள், கொள்கைகள் தயாரிப்பில் தீவிரம்'
June 20, 2017இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கம...
மே 15- 19-ம் தேதி வரை ரஜினி ரசிகர்களோடு நடத்திய சந்திப்பும், அதில் ரஜினி பேசிய பேச்சும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இன்றளவும் பேசு பொருளாக இருந்துவருகிறது.
"ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறது. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது.
எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில் ரஜினி பேசியது ஹைலைட்டாக இருந்தது.
ரசிகர்களுடனான சந்திப்பு முடிந்தவுடன் 'காலா' படத்தின் படப்பிடிப்புக்காக மும்பைக்குப் பயணமானார் ரஜினி. முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரும்பியிருப்பவரை பல்வேறு அரசியல் தலைவர் சந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஜூன் 18-ம் தேதி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஜூன் 19-ம் தேதி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ரஜினியைச் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதே வேளையில் திருமாவளவன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக வரவேற்பதுடன், மிகப் பெரிய மாற்று சக்தியாக ரஜினி இருப்பார் என்றும் கூறி வருகிறார்.
அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வரும் ரஜினியின் மனநிலை என்ன என்பது குறித்து, அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:
தமிழகத்தில் நிலவும் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் ரஜினி. மேலும், தான் அரசியலுக்கு வந்தால் தமிழக மக்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதைக் கணக்கெடுத்துக் கொடுக்குமாறு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூவரிடம் பேசிப் பெற்றுள்ளார்.
அக்கணக்கெடுப்பில் மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்கள். இதனால் ரஜினி மிகவும் சந்தோஷமாக அடுத்தகட்டப் பணிகளில் இறங்கிவிட்டார்.
தனது அரசியல் அறிவிப்பு முதல் கூட்டத்தில் அறிவிக்கவுள்ள திட்டங்கள் குறித்து, பல்வேறு தரப்பில் ஆலோசனைகளை நடத்தி வருகிறார் ரஜினி. மக்களைக் கவரும் வெறும் கவர்ச்சி திட்டங்களாக இல்லாமல், தமிழகத்தில் நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினைகளை களையும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் ரஜினி.
அவரைச் சுற்றியிருப்பவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்கள் கூறிய போது கூட "இதெல்லாம் அறிவித்தால் நமக்கும், மற்றவர்களுக்கு என்ன வித்தியாசம் சொல்லுங்கள்" எனக் கூறியுள்ளார் ரஜினி.
முதலில் ரஜினி அரசியலுக்கு வரத் திட்டமிட்ட போது, குடும்பத்தினர் மத்தியில் சிறு அளவு எதிர்ப்பு நிலவி உள்ளது. சிங்கப்பூரில் சிகிச்சையில் இருக்கும் போது, இங்குள்ள மக்கள் தனக்குக் கொடுத்த ஆதரவு ஒவ்வொன்றையும் பார்த்த பிறகே, கண்டிப்பாக அரசியலுக்கு வந்து நல்லது செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் ரஜினி. அப்போது குடும்பத்தினர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அரசியலுக்கு வருவது எனத் தீர்மானித்தவுடன், முதலில் இதுவரை திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் செய்த தவறு என்ன என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார். மேலும் அரசியல் ரீதியாகப் பேசுவதற்குத் தன்னைச் சுற்றி மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
எந்தவொரு காரணத்தைக் கொண்டும், அரசியல் ரீதியாக நாம் பேசும் கருத்துகள் எதுவும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியல் தொடர்பாக எந்தவொரு விவாதத்திலும் கலந்து கொள்ளக் கூடாது. கருத்து தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், தன்னுடைய முதல் அரசியல் கூட்டத்தில், தனது கட்சிக்கான கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கவுள்ளார் ரஜினி. அதுவரை ரஜினியின் கொள்கைகள் என யாரும் எதையும் பேசிவிடக் கூடாது என்பது தான் முக்கியக் காரணம்.
தனது பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், உண்மையில் ரஜினி இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை. மிகவும் பொறுமையாகத் தன்னுடைய ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும்.
தற்போது திட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அனைத்துமே முடிவானவுடன் மட்டுமே முதல் கூட்டம் எப்போது என்பதை முடிவு செய்யவுள்ளார் ரஜினி.
ஆகையால், இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

வெறும் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம்தானா? கமல் ஆதங்கப்பட்டது ஏன்?
June 20, 2017பாரதியார் பூணூலை அறுத்துப் போட்ட கதையாக பல விஷயங்களை அறுத்துப் போட்டு அலற வைத்துக் கொண்டிருக்கிறார் கமல். அதில் ஒன்று உடல் தானம்! நடிகர்கள்...
அப்படிப்பட்ட கமல்தான், வெறும் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம்தானா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பிரபல ஹீரோவான கமல், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பத்திரிகையாளராக இருக்கும் தேவராஜின் செயல் குறித்து வியப்படைந்ததுடன், அவரை தன் வீட்டுக்கே வரவழைத்து பாராட்டியும் இருக்கிறார். அப்படியென்ன செய்துவிட்டார் தேவராஜ். வேறொன்றுமில்லை. கமலின் அடியொற்றி அவரைப்போலவே தன் உடலையும் தானம் செய்துவிட்டார். தனது பிறந்த நாளில் அவர் செய்த இந்த காரியத்தை பாராட்டினாராம் கமல்.
அப்போது உடல்தான சீரியலின் படி தனது எண் என்னவென்று சொல்லியிருக்கிறார் தேவராஜ். “ஆயிரத்து ஐநூற்று அறுபதாவது நபர் நான்தான்” என்று இவர் சொல்ல…. “ஏழு கோடி பேருக்கு மேல் வாழுற தமிழ்நாட்டில் உடல் தானம் செய்தவர்களின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்து சொச்சம்தானா?” என்று வருந்தியிருக்கிறார் கமல்.
‘உடல் மண்ணுக்கு… உயிர் தலைவனுக்கு’ என்று கொடி பிடிக்கும் குப்புற புத்திகள், ‘உடல் மருத்துவமனைக்கு. உயிர் தலைவனுக்கு’ என்று குரல் கொடுத்தால் ஒருவேளை இந்த எண்ணிக்கை லட்சங்களை தாண்டி கோடிகளை தொடுமோ என்னவோ?
புலிமுருகன் - திரைவிமர்சனம்
June 20, 2017மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆன புலிமுருகன் படம் தமிழில் இன்று வெளியாகியுள்ளது. அது ப...
கதைக்களம்
சிறுவயதில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த மோகன்லால் தன் தம்பியை தன் மாமன் மற்றும் புலியூர் மக்களின் உதவியுடன் வளர்த்து ஆளாக்குகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே ஊர்காரர்களுக்கு தொந்தரவாக பெரிய புலி ஒன்று நடமாடி வருகிறது. பலரையும் தாக்கும் இப்புலியால் ஒரு பெரிய ஆபத்து வருகிறது.
இதற்கிடையில் முருகன் என கிராம மக்களால் அழைக்கப்படும் மோகன்லாலுக்கு ஊர்க்காரியான கமாலினி முகர்ஜி மீது காதல் வருகிறது. அவரை திருமணம் செய்து தன் செல்ல மகளுடன் காட்டில் வாழ்கிறார்.
வனத்துறை அதிகாரியாக வரும் கிஷோரால் கமாலினிக்கு பாலியல் தொல்லை வருகிறது. இன்னொரு பக்கம் முக்கிய புள்ளியின் மகளாக வரும் நமீதாவுக்கு முருகன் மீது ஆசை வருகிறது. அவ்வப்போது வந்து போகிறார்.
தன் தம்பியின் நன்மைக்காக உதவி செய்யப்போய் வில்லன் கஜபதி பாபுவின் வஞ்சக வலையில் முருகன் சிக்குகிறார். தாதா கிரி என்ற பெயரில் கஜபதி கடத்தல் தொழில் செய்கிறார். ஒரு கட்டத்தில் முருகனின் தம்பி உயிருக்கு வில்லனால் ஆபத்து வருகிறது.
நமீதாவின் வலையில் முருகன் விழுந்தாரா, தன் தம்பியை காப்பாற்றினாரா, புலி என்னானது, ஊர்மக்கள் என்ன ஆனார்கள் என்பது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
காடுகளை மைய்யப்படுத்தி படங்கள் பல வந்தாலும், புலியை வைத்து ஏதோ படம் எடுத்திருக்கிறார்கள். காட்டுக்கே ராஜா போல மோகன்லாலை மக்கள் நினைக்க அவரும் நடிப்பை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தம்பிக்கு நன்மை செய்தாலும் அநியாய வழியில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் மோகன்லால் செய்யும் வேலை கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட்.
மனைவியாக நடித்திருக்கும் கமாலினி கடைசி வரை அப்படியே மலைவாழ் பெண் போல மாறியிருக்கிறார். மோகன்லாலுடன் இவர் போடும் சண்டைகள் ரசிக்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் முகம் காட்டியிருக்கிறார்.
சான்ஸ் தேடி அலைந்த நமீதா தான் முதலில் எப்படி கவர்ச்சி காட்டி எண்ட்ரி கொடுத்தாரோ அதே போல இதிலும் இறங்கியிருக்கிறார். இவருக்கு ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் பெரிதாக கான்ஸப்ட் இல்லை.
கஜபதி பாபு எல்லா படங்களிலும் இருப்பது போல தான் இந்த படத்திலும். புலியை பிடிக்க விரித்த வலையில் இவர் சிக்கியது படத்தின் கோணத்தை திசை திருப்புகிறது.
முதல் பாதி புலியை நோக்கி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி வேறு ட்ராக்கில் போவது தான் கொஞ்சம் இடிக்கிறது.
கிளாப்ஸ்
இயக்குனர் காட்சிகளை படமாக்கியவிதம் நன்றாக இருந்தது. டப்பிங் செய்த விதம் கச்சிதம்.
ஒரே பாடல் தான் என்றாலும் மலையாள சாயல் அப்படியே இருந்தது.
கிளாமாக்ஸ் சண்டை காட்சிகள் மோகன்லாலுக்கு சவால். ரசிக்கும் படி இருந்தது.
பல்பஸ்
சக வனத்துறை அலுவலரை புலி தாக்கும் போது மற்றவர்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது லாஜிக் பிரச்சனை.
கதை போகும் போக்குக்கும் படத்தின் பெயருக்கும் விரிசல் இருப்பது போல தோன்றுகிறது.
மொத்தத்தில் புலிமுருகன் ஒகே. புலி பதுங்கி நிற்குமா, பாய்ந்தோடி விடுமா என பொறுத்திருந்து பார்போம்.
விஜய் சேதுபதி பழங்குடி இன தலைவரா? இது எப்போ
June 20, 2017நடிகர் விஜய் சேதுபதி தன் தனித்திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். படத்திற்கு படம் இவரின் நடிப்பில் வித்தியாசம் தெரிவதை காணமுடிகிறது....
வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேடிப்பிடித்து நடிப்பதே இவரின் ஸ்டைல். இதில் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து பேசியுள்ள இயக்குனர் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். அவருக்கு சுவாரசியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சவாலான ரோலை மிக எளிமையாக கையாண்டுள்ளார்.
படத்தில் பழங்குடி இன தலைவராக நடித்திருக்கும் விஜய் சேதுபதி 8 விதமான தோற்றங்களில் நடித்துள்ளார் என அவர் கூறியுள்ளார். சாகசம் நிறைந்த காமெடி படமான இது அவரது படங்களில் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.