சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மெர்சல் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது தெரியுமா?
October 25, 2017தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல். படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில...
படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து ரிலீஸ் ஆன பிறகும் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.
இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம்.
முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.
விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும்’ -மெர்சல் பட எதிர்பாளர்களுக்கு கமல் பதிலடி
October 20, 2017தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்று...
படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் கமல் மெர்சல் பட சர்ச்சை குறித்து தனது கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் , “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களை தெளிவான புரிதலுடன் கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்க செய்யாதீர்கள். விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும் ” என மெர்சல் படத்தை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல்.
மேயாத மான் - திரைவிமர்சனம்
October 20, 2017மெர்சலா வாரங்க, கூடவே நாங்களும் துள்ளி வரோம் என மேயாத மான் படத்தின் புரமோஷனை பார்த்திருப்பீர்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் சிறு பட...
மெர்சலா வாரங்க, கூடவே நாங்களும் துள்ளி வரோம் என மேயாத மான் படத்தின் புரமோஷனை பார்த்திருப்பீர்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் சிறு படங்கள் சற்று வழிவிட்டு செல்லும்.இந்த தீபாவளி ரேசில் மெர்சல் வந்தாலும் கூடவே தில்லாக இறங்கியிருக்கிறது மேயாத மான். சரி இம்மான் போகும் பாதை என்ன, கதை என்ன என பார்க்கலாம்.
கதைக்களம்
ஹீரோ வைபவ் ஐ இதயம் முரளி, இதயம் முரளி என படத்தில் அழைக்க இவருக்கு ஒரு பெரும் பின்னணி இருக்கிறது. அப்படி என்ன இவருக்கு பின்னணியாக இருக்கும் என்பதை நீங்கள் சற்று யூகித்திருக்கலாம்.
இசைக்கச்சேரி குழுவை நடத்தி வரும் இவருக்கு ஒரே ஒரு தங்கை மற்றும் வினோத், கிஷோர் நண்பர்களும், இசைக்குழுவும் தான் குடும்பம்.
ஹீரோயினாக முகம் காட்டியுள்ள பிரியா பவானி சங்கர் ஒரு பெரிய இடத்து பெண். அளவான குடும்பம், அழகான வாழ்க்கை என இவரின் குடும்பம் செல்கிறது. ஹீரோவுடன் கம்ப்பேர் பண்ணும்போது இவரின் லெவல் வேறு.
மொட்டை மாடியில் நின்று நான் சாகப்போகிறேன் என அடிக்கடி மிரட்டும் வைபவை ஐ, அப்போதெல்லும் புராணம் பாடுகிறார் என நினைக்கிறார்கள். விளையாட்டாக நடக்கும் நிகழ்வு ஒரு நாள் நிஜமாக அனைவரும் பதறுகிறார்கள்.
மதுமிதா அப்போது இவ்விசயத்தில் நுழைய வைக்கப்படுகிறார். வைபவ் தற்கொலையில் இருந்து தப்பித்தாரா அதற்கான காரணம் என்ன என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
சென்னை 28 2, க்கு பிறகு நடிகர் வைபவ்க்கு பெரிய ரோலாக மேயாத மான் வந்துள்ளது. படம் முழுக்க இவரின் பங்கு நிறைந்துள்ளது. கதைக்கேற்ற கேரக்டர். பேச்சில் லோக்கல் வாடை வீச, பாட்டு, ஆடல் என காட்சிகளை கலர்ஃபுல் ஆக்குகிறார். முரளி முரளி என இவர் செய்யும் செய்கைகள் படத்திற்கு உச்சம்.
டிவி, சீரியல் என கலக்கி வந்த பிரியாவுக்கு திறமைகாட்ட சரியான இடமாக இந்த மேயாத மான் கிடைத்துள்ளது. இயல்பான நடிப்பால் இளைஞர்களின் இதயத்தில் நிற்பார். கிடைத்த வாப்பை பயன்படுத்தியிருக்கிறார். ரொமான்ஸ் சீனில் மணிரத்னம் படத்தை ஹைலைட் செய்து கவனம் ஈர்க்கிறார்.
இரண்டாம் ஹீரோயினாக இந்துஜாவுக்கு ஒரு பக்கம் காதல் துளிர்விடுகிறது. ஆனால் இந்த காதல் வேறு பக்கம் வீச கதைக்கு ட்விஸ்ட். ஒரு பாட்டுக்கு இறங்கி செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்படத்தில் இவரை மது மது என புகழ் பாடினாலும் குடி மதுவையும் கொண்டாடுகிறார்கள்.
இயல்பான சில காட்சிகளை கூட காமெடி காட்சிகள் இருந்த நிறைவை கொடுத்திருக்கிறது. துள்ளும் மானுக்கேற்ற குத்தாட்ட பாடல்கள். மான் ஃபீலிங்கில் இருந்தால் அதற்காக சிச்சுயேசன் பாடலும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ரத்ன குமார் படத்தை முழுமையாக கொடுத்திருக்கிறார்.
கிளாப்ஸ்
நகைச்சுவை நடிகர்கள் இல்லாத குறையை வைபவ் மற்றும் நண்பர்கள் நிவர்த்தி செய்திருக்கிறார்கள். வைபவ் இப்படத்தில் மீண்டும் இறங்கி விளையாண்டுள்ளார்.
இயக்குனரின் கதை எளிமையாக இருந்தாலும் நிறைவான திருப்தி கொடுத்திருக்கிறார் என சொல்லலாம்.
பிரியா பவானிக்கு இன்னும் பல படங்கள் வரும் வாய்ப்பு இருக்கும் என இப்படம் சொல்லும்.
பாடல்கள் கொண்டாட்டம் போடவைத்தாலும், வரிகள் சிலருக்கு நினைவில் நிற்கலாம்.
பல்பஸ்
இரண்டாம் கட்டம் தான் படம் போல தோன்றுகிறது. முதல் கட்டத்தில் கதை நீளமாக செல்வதால் மிகவும் உன்னித்து பார்த்தாலும் மான் வேறுபாதையில் போகிறதோ என தோன்றும்.
இதை குறைத்து நீளத்தை சுருக்கினால் படம் இன்னும் கிரிஷ்ப்பாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் மேயாத மான் இது காட்டுமான் அல்ல. கலைமான். தன்னை தேடி வந்தவர்களுக்கு விருந்து வைக்கும். மான் போகும் பாதை மனதிற்கு மகிழ்ச்சி. அனைவரும் பார்க்கலாம்.
மெர்சலில்- விஜய் சொன்னது போல் அவர் மிரட்டிவிட்டார், ஆனால், அட்லீ மிரட்டவில்லையே...
October 20, 2017தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் த...
கதைக்களம்
மருத்துவரான மாறன் சிறந்த மனிதநேய தொண்டாற்றியதற்காக ப்ரான்ஸில் விருது வாங்க செல்கின்றார். அங்கு அவரை சந்திக்கும் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் எங்களுடன் வா என்று கட்டளையிட, விஜய் வர மறுக்கின்றார்.
அதை தொடர்ந்து விஜய்யை விலைபேச நினைக்கும் டாக்டர், ப்ரான்ஸில் நடக்கும் மேஜிக் ஷோவில் கொல்லப்படுகின்றார். இதையெல்லாம் செய்தது யார் என்று காவல்துறை அதிகாரி சத்யராஜ் தேடி வர மாறனாக இருக்கும் பிடிப்படுகின்றார்.
அதே நேரத்த்தில் எஸ்.ஜே.சூர்யா மாறனை யதார்த்தமாக தொலைக்காட்சியில் பார்க்க, அவருக்கு சில நினைவுகள் வந்து உடனே மாறனை கொல்ல கட்டளையிடுகின்றார்.
உடனே அவரின் அடியாட்கள் மாறனை கத்தி முனையில் வைக்க, அதை தொடர்ந்து பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. எஸ்.ஜே.சூர்யா ஏன் மாறன் விஜய்யை கொலை செய்ய சொன்னார், எதற்கு ப்ரான்ஸில் அந்த டாக்டரை விஜய் கொன்றார் என பல காட்சிகளுக்கான விடை இரண்டாம் பாதியில் தெரிகின்றது.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஒன் மேன் ஷோவாக படம் முழுவதும் காலில் சக்கரம் கட்டி சரவெடியாக வெடிக்கின்றார். ஒரே நேரத்தில் மருத்துவராக இருந்துக்கொண்டு, அப்படியே மேஜிக் செய்யும் காட்சிகள் படத்தில் உண்மையாகவே எத்தனை விஜய் என்று யோசிக்க வைக்கின்றது. இதையெல்லாம் விட தூக்கி சாப்பிடுவது மதுரை தளபதி தான்.
வேஷ்டி, சட்டை என மீசையை முறுக்கி அவர் சண்டைப்போடும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம விருந்து. படத்தின் கதைக்களம் மக்களின் மிக முக்கியமான தேவைகளின் ஒன்று, அதில் விஜய் போல் மாஸ் ஹீரோ நடிப்பது பட்டித் தொட்டியெல்லாம் இந்த பிரச்சனையை கொண்டு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் படத்தின் பல காட்சிகளில் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்திலேயே தான் வசனங்கள் நிறைந்துள்ளது. ஏன் அட்லீ இப்படி? என்று கேட்க வைக்கின்றது, ஆனால், ‘இன்று சிசேரியன் குழந்தை என்றால் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள், இன்னும் 30 வருடம் கழித்து சுகபிரசவம் என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’ என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனம் தற்போதுள்ள சூழ்நிலையை கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா இரண்டு சீன் வந்தாலும் சரி, மூன்று சீன் வந்தாலும் சரி தனக்கான கதாபாத்திரத்தில் கலக்கிவிடுகின்றார். ஆனால், அவ்வப்போது ஸ்பைடர் வாசனை வருகின்றது, கொஞ்சம் ரூட்டை மாற்றுங்கள் சார்.
படத்தின் மிகப்பெரும் பலமே மதுரை போஷன் தான். விஜய்க்கும், நித்யா மேனனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி மிகவும் கவர்கின்றது. அதிலும் அவர் நித்யா மேனனிற்கு பிரசவம் நடக்கும் போது தன் மூத்த பையனிடம் கதை சொல்லும் காட்சி செம்ம க்ளாஸ்.
அதே நேரத்தில் படத்தின் நீளம் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கின்றது. என்ன தான் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் ஒரு கட்டத்தில் பொறுமையை சோதிக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து பார்முலா.
டெக்னிக்கலாக படம் மிகவும் பலமாக உள்ளது, அதிலும் விஷ்ணுவின் ஒளிப்பதிவு முதல் படம் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாது. ரகுமானின் பாடல்கள், பின்னணி இசை ரசிக்க வைக்கின்றது, ஆளப்போறான் தமிழன் ரிப்பீட் மோட் தான்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம் தற்போது நாட்டில் நிலவும் விஷயங்களுக்கு மிக ஏற்ற கதை.
விஜய் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கின்றார். பாடல் காட்சிகளில் எல்லாம் இந்த வயதிலும் நடனத்தில் தூள் கிளப்புகின்றார்.
மதுரை ப்ளாஷ்பேக் காட்சிகள். விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ரகுமானின் இசை
பல்ப்ஸ்
சத்யராஜ், காஜல், சமந்தா இவர்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றார்கள். ஆனால், ஏன் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மட்டுமில்லை இயக்குனரே மறந்துவிட்டார்.
வடிவேலுவின் எந்த ஒரு காமெடி காட்சியும் பெரிதும் க்ளிக் ஆகவில்லை.
படத்தின் நீளம், இன்னும் கொஞ்சம் காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மெர்சலில் விஜய் சொன்னது போல் அவர் மிரட்டிவிட்டார், ஆனால், அட்லீ மிரட்டவில்லையே...
சென்னையில் ஒரு நாள்-2 - (முதல் பாகத்துடனே) இருந்திருக்கலாம்
October 20, 2017சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாக...
கதைக்களம்
சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தில் இறங்கி ஏஞ்சல் யார்? என்பதை தேட முயற்சிக்கின்றார். ஒவ்வொரு இடமாக இவர் தேடி சென்றாலும் எங்குமே ஏஞ்சல் யார் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
பிறகு தான் அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிகின்றது, இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டு, போலிஸாரின் கவனத்தை திசை திருப்பி, மர்ம கும்பம் ஒன்று வேறு ஏதோ பெரிய விஷயத்தை செய்யவிருக்கின்றது என்று. அந்த விஷயம் என்ன? சரத்குமார் அதை கண்டுப்பிடித்து சதி செயலை முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சரத்குமார் ஒரு சில வருடங்களுக்கு பிறகு திரையில் பார்ப்பது சந்தோஷம் தான். மேலும், ஒரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு, ஆனால், இது சரத்குமாருக்கான களமாக தெரியவில்லை. பெரிதும் அவர் படத்தில் தன் நடிப்பை பதிய வைத்தது போல் எந்த இடத்திலும் தோன்றவில்லை.
படத்தின் டைட்டிலேயே சென்னையில் ஒரு நாள் இந்த முறை கோயம்புத்தூரில் என்று தான் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். படம் முழுவதும் ஒரு வீட்டை சுற்றி தான் கதை நடக்கின்றது, சில காட்சிகளில் கோயம்புத்தூர் போர்டை காட்டுகின்றனர்.
இதற்கு இவர்கள் சென்னையில் என்றே படத்தை தொடங்கியிருக்கலாம், மேலும், படத்தின் கதையை கேட்கும் போது மிக சுவாரசியமாக இருக்கும், புதிய மருந்து, மெமரிலாஸ் என பல விஷயங்கள் இருந்தாலும் அதற்கான காட்சிகள் வலுவாக இல்லை என்பதே உண்மை.
படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது டெக்னிக்கல் விஷயங்கள் பார்க்கும் போதே தெரிகின்றது, ஆனால், அதையும் தாண்டி Jakes Bejoy-யின் பின்னணி இசை மிரட்டல்.
க்ளாப்ஸ்
கதைக்களம், மிக சுவாரசியமான ஒரு கதையை கையில் எடுத்துள்ளனர்.
Jakes Bejoy-ன் பின்னணி இசை.
பல்ப்ஸ்
ஒரு நல்ல கதையை படமாக்கிய விதம், திரைக்கதையில் எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் ஏற்படவில்லை.
மொத்தத்தில் சென்னையில் ஒரு நாளுடனே (முதல் பாகத்துடனே) இருந்திருக்கலாம்.
மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான்! மறந்தும் சாப்பிடாதீங்க!!
October 20, 2017நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லத...
அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.
அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது.
எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.
பசலைக் கீரை மற்றும் எள் : பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.
திப்பிலி மற்றும் மீன் : திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
துளசி மற்றும் பால் : நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.
தேன் மற்றும் ஒயின் அல்லது சர்க்கரை : தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.
சில உணவுகளுக்குப் பின் பால் : முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.
பால் மற்றும் புளிப்பாக பழங்கள் : எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு , மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
வாழைப்பழம் மற்றும் மோர் : மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடவே கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.
இறைச்சி மற்றும் விளக்கெண்ணெய் விளக்கெண்ண்யில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானமட்டுமல்லாது வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்

