ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்!
March 11, 2018சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! ! ...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!
March 11, 2018சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (...
முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.
பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மனிதர்களை கொல்லும் புதிய உயிர்கொல்லி நோய் ‘டிசீஸ் எக்ஸ்’ – உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்
March 11, 2018வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்...
ஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமை நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பட்டியலை புளூபிரிண்ட் ஆய்வு வெளியிட்டு வருகிறது. அதில் எபோலா, லாசா பீஃவர், சிசிஎச்எப் ஹீமோராஜிக் ஃபீவர், நிபா, மெஸ்(MESS), சார்ஸ்(SARS), எபோலா, டிசீஸ் எக்ஸ் என்ற புதிய நோயையும் அறிவித்துள்ளனர். குறிப்பாக ஒட்டுமொத்த உலக மக்களின் சுகாதாரத்துக்கு அவசர நிலை ஏற்படுமளவு புதிய நோய் பரவ இருப்பதாகவும், இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதங்களை அந்த நோய் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நோய்க்கு டிசிஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசிஸ் எக்ஸ் ஒரு தொற்று நோய் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிசீஸ் எக்ஸ் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘ இந்த டிசீஸ் எக்ஸ்’ நோய் சர்வதேச அளவில் மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவெடுக்கும். ஆனால், மனித இனத்துக்கு எந்தவிதமான பாதிப்பை உண்டு செய்யும் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து நார்வே நாட்டின் அறிவியல் அறிஞரும், உலக சுகாதார அமைப்பின் ஆலோசகருமான, ஜான் அர்ன் ராட்டிங்ஜென், “இதற்கு முன் இதுபோன்ற நோயை நாங்கள் பார்த்தது இல்லை. அதன் காரணமாகவே இந்த நோய்க்கு “எக்ஸ்” எனபெயரிட்டுள்ளோம். டிசீஸ் எக்ஸ் நோய் உலகளவில் மக்களின் நலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்த நோய் குறித்த ஆய்வும், கண்காணிப்பும், அதைத் தடுக்கும் முறையும் இனி அவசியம். ஆனால், விரைவில் நோயின் தீவிரத் தன்மையை ஆய்வு செய்து, எப்படி உருவாகிறது என்பதை அறிந்து, அதற்குரிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்போம்.
மனிதனால் உருவாக்கப்படும் வைரஸ், நோய் என்பது மிகவும் கொடுமையானது, ஆபத்தானது. ஏனென்றால், இந்த நோய் எப்படி உருவாகிறது, எந்த வைரஸில் இருந்து உருவாக்கினார்கள், இதற்கு தடுப்பு மருந்து என்ன என்பதை கண்டுபிடிக்கவே ஆண்டுகள் ஆகலாம். புதிதாக உருவாகும் வைரஸ் அல்லது நோய்க்கு ஏற்றார்போல் மனித உடலுக்கு எதிர்ப்பு சக்தி உடனடியாக உருவாகாது. இதற்குரிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முன் லட்சக்கணக்காண மக்களுக்கு பரவிவிடும்.
சிந்தடிக் பயாலஜி எனும் முறை, புதிய உயிர்கொல்லி வைரஸ் நோய்களை கண்டுபிடிக்கும் முறையை அனுமதிக்கிறது. இந்த முறையின் மூலம் புதிய வைரஸ் அல்லது நோயை கண்டுபிடித்து மக்களிடையே பரப்பினால், மிக வேகமாக பரவும். ஆனால், இந்த டிசீஸ் எக்ஸ் நோய் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவானதா என்பதே தெரியவில்லை. ஆனால், இயற்கையாக உருவானதாக இருக்கலாம் என நம்புகிறோம். இதற்கு முந்தைய ஸ்பானிஷ் ஃபுளு, எச்ஐவி போன்றுகூட இருக்கலாம். மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான அதீத தொடர்பு மூலம் இந்த நோய் வந்திருக்கலாம்.
ஜிகா வைரஸும் முதலில் இப்படித்தான் அஞ்சப்பட்டது, முதலில் நூற்றுக்கணக்கில் ஆப்பிரிக்காவில் மக்களை கொன்று குவித்தது, இப்போது, ஆயிரக்கணக்கில் மக்கள் மடிகிறார்கள். இன்னும் தடுப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கவில்லை உலக நாடுகள் தங்களின் ஆய்வுகளை தீவிரப்படுத்தி, எதிர்கால நோயான டிசீஸ் எக்ஸ் நோய்காகன தடுப்பு மருந்துகளையும், அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்
அதே சமயம் டிசீஸ் எக்ஸ் நோய் இயற்கையால் உருவாகாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட நோயாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள், உயிர்கொல்லி ஆயுதங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியாலும் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கூட இதுபோன்ற உயிரி ரசாயன குண்டுகள் வீசப்பட்டு மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எய்ட்ஸ், சார்ஸ், ஸ்வைன்ஃப்ளு, எபோலா என்று விஞ்ஞான உலகம் மனிதனுக்கு அறிமுகப்படுத்திய வியாதிகள் போதாது என்று புதிதாக டிசீஸ் எக்ஸ் வேறு பயமுறுத்துகிறது. இவற்றை எல்லாம் யார்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரியாதா? இதுபோன்ற உயிரி ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சிக்கு முடிவுகட்ட முடியாதா என்ற கேள்விதான் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.
”ராகுல் காந்தி மன்னிக்கட்டும்..ஆனால், என் போராட்டம் தொடரும்!” - அற்புதம்மாள்
March 11, 2018இந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் ...
”எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை!”
”நான் என் பாட்டியைக் கொன்றவர்களுடன் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன். அவர்கள் என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் பார்த்திருக்கிறேன். எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும். இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன் தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது. அப்படிதான் எனது பாட்டியும் அப்பாவும் இறந்தார்கள். தான் இறந்துவிடுவேன் என்று எங்கள் பாட்டி என்னிடம் சொன்னார். இந்த அரசியலை உணர்ந்திருந்த நான் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். ஸ்ரீபெரும்புதூரில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது நான் ஹார்வார்டில் இருந்தேன். தேர்தல் பிரசாரம் தொடர்பான விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தது. அது மிகவும் பிரச்னையான தேர்தல் என்பதும் எனது அப்பா தேர்தல் பிரச்சாரத்துக்காக வருவது ஆபத்தானது என்பதும் நாங்கள் அறிந்திருந்ததே.ஹார்வார்டில் எனக்கு திடீரென்று ஒரு போன் அழைப்பு வந்தது. எனது அப்பாவின் நண்பருடைய நண்பர் ஒருவர் அழைத்தார். “ராகுல்! உனக்கு ஒரு கெட்ட செய்தி என்றார்!”. என்னால் அந்தச் செய்தியை ஊகிக்க முடிந்தது. “இறந்துவிட்டாரா?” என்று கேட்டேன். ”ஆம்!”, என்றார். அழைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசியலில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியாத பல சக்திகளுடன் நாம் போராட வேண்டி இருக்கிறது. அதுபற்றிப் பொதுமக்களுக்கும் தெரிவதில்லை அதனால் நம் மீது வேறு மாதிரியான பிம்பம் படிகிறது. அப்பா இறப்பிற்குப் பிறகு மிக நீண்ட காலம் எனக்குள்ளும் பிரியங்காவிற்குள்ளும் அந்தக் கோபம் அப்படியே இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது மாறிவிட்டது. ஈழத்தில் பிரபாகரனின் இறந்த உடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது உண்மையில் எனக்குள் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘ஏன் இவர்கள் பிரபாகரனை அவமானப்படுத்துகிறார்கள்?’ என்றுதான் தோன்றியது. அவரின் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்குமாக வருந்தினேன். பிரியங்காவும் அதே சிந்தனையில்தான் இருந்தாள். காரணம், எங்களால் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் ஒரு குடும்பம்,அதன் அற்புதம்மாள்குழந்தைகள் அந்தச் சமூகம் என அத்தனையும் பாதிக்கப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்திருந்தோம். எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை. ஆம், நாங்கள் முழுவதுமாக எங்கள் அப்பாவைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்” என்றார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பல்வேறு அரசியல் தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
”ராகுல் மன்னிக்கட்டும்...என் போராட்டம் தொடரும்!”
இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளை தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில்,“என் மகன் குற்றவாளியே இல்லை நிரபராதி என்றுதான் இத்தனை வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்.செய்யாத குற்றத்திற்காக எனது மகன் இத்தனை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டான். அதற்கு யார் பொறுப்பு?.ஒரு பக்கம் என் மகன் குற்றவாளி இல்லை என்று நிருபிப்பதற்கான காரணங்கள் நிறையவே நீதிமன்றத் தரப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தான் மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கிற்றார். அவர்கள் மன்னிக்கட்டும் ஆனால் என் மகன் குற்றவாளியே இல்லை என்கிற என்னுடைய போராட்டம் தொடரும்.
அஜித் கூட நடிக்கலனா பரவாயில்லை, ஆனால் அது மட்டும்- டிடியின் புதிய ஆசை நிறைவேறுமா?
March 11, 2018பெண் தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் டிடி. இவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தாண்டி இப்போது சில பாடல் வீடியோக்கள், பட...
அண்மையில் இவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் சொந்த விஷயங்களால் நடிக்க முடியவில்லை. இதுவரை அஜித் அவர்களை நேரில் பார்த்தது இல்லை, அவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியுள்ளார்.
ரஜினி கமலால் அது முடியவே முடியாது! மறைமுகமாக சாடிய பிரபல நடிகர்
March 11, 2018சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமலின் நடவடிக்கைகள் மிகவேகமாக இருந்து வருகிறது. தற்போத...
ரஜினி ஒருபக்கம் இமயமலை சென்றுள்ளார். படம் முடிந்ததும் அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அவர் தற்போதும் சென்றுள்ளார். அவர் கட்சி பணிகளுக்காக தான் சென்றுள்ளார் என சில தகவல்கள் வந்தது.
ஆனால் அவர் நான் ஆன்மிக யாத்திரையாக இமயமலை வந்துள்ளேன், அரசியல் பேச விரும்பவில்லை, வழக்கமான பணியிலிருந்து மாறுதலை உணர்கிறேன். சுற்றுப்பயணம் நன்றாக, தெய்வீகமாக உள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர்களால் சினிமாவில் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் நடிகர் ராதாரவி நெல்லையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசியுள்ளார்.