டைரக்டர் ஆகிறார் விஜய் ஆன்ட்டனி! அதுவும் இங்கல்ல, இந்தியில்?

பல முன்னணி ஹீரோக்களை கூட குறுகிய காலத்தில் குபீர் என்று வேர்க்க விறுவிறுக்க விட்டவர் விஜய் ஆன்ட்டனி. வம்பு தும்புக்கு போகாத மவுன சாமியார் எ...

பல முன்னணி ஹீரோக்களை கூட குறுகிய காலத்தில் குபீர் என்று வேர்க்க விறுவிறுக்க விட்டவர் விஜய் ஆன்ட்டனி. வம்பு தும்புக்கு போகாத மவுன சாமியார் என்று பெயர் எடுத்தாலும், அவரது படங்களில் மட்டும் அவர் சாமியாரல்ல! தனக்கு என்ன வருமோ, அதை லபக்கென பிடித்துக் கொண்டு அதற்கேற்றார் போல கதையை செதுக்கிக் கொள்ளும் இவரது ஸ்டோரி நாலெட்ஜ், கண்காட்சியில் வைத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!

வருடத்தின் டாப் ஹிட் வரிசையில் பிச்சைக்காரனுக்கு பெருமளவு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள் ரசிகர்கள். பாய்ச்சல் அதோடு நிற்கவில்லை விஜய் ஆன்ட்டனிக்கு. அதையும் தாண்டி… என்று அடுத்த கட்டத்திற்கு தாவிவிட்டார்.

பிச்சைக்காரன் படத்தை இந்தியில் தயாரிக்கப் போகிறார். அதுவும் அவரே ஹீரோவாக நடித்து அவரே இயக்கி! தமிழில் இயக்குனர் சசி இயக்கியிருந்தாலும், கதை உரிமைக்காக ஒரு தொகையை முன்பே கொடுத்துவிட்டாராம் விஜய் ஆன்ட்டனி. அதற்கப்புறம் அதை இயக்குவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? ஆனால், இவருக்கு எதுக்கு வேண்டாத வேலை? வந்தமா, நல்ல கதைகளில் நடிச்சமான்னு இல்லாமல் என்று வழக்கம் போல கடப்பாரை கொண்டு சொருக ஆரம்பித்திருக்கிறது ஊர் உலகம்.

அது சொல்ற பேச்சை கேட்டிருந்தால், விஜய் ஆன்ட்டனின்னு ஒரு வெற்றிப்பட ஹீரோவே கிடைத்திருக்க மாட்டார். அதனால்… நீங்க ஜமாய்ங்க ஆன்ட்டனி!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About