சினிமா
நிகழ்வுகள்
'போகன்' அப்டேட்: பாடகராக அறிமுகமாகும் அரவிந்த்சாமி
October 11, 2016
லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் 'போகன்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக இருக்கிறார் அரவிந்த்சாமி.'மிருதன்' படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 'போகன்' என பெயரிடப்பட்ட இப்படத்தில் அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருகிறார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
"'போகன்' படத்தை பார்த்துவிட்டேன். மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயம்ரவிக்கு அடுத்த வெற்றியாக அப்படம் அமையும். டிசம்பரில் வெளியாகும்" என்று 'தேவி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் பிரபுதேவா தெரிவித்தார்.
இந்நிலையில், இப்படத்துக்காக பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் அரவிந்த்சாமி. பாதிப் பாடலை பாடியிருக்கும் அரவிந்த்சாமி, மீதிப் பாடலை இன்று (அக்டோபர் 11) முடிக்க இருக்கிறார். முதல் முறையாக 'போகன்' படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமாக இருக்கிறார் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments