பிரம்மாண்ட படத்தின் ஹீரோ தேடல் தொடர்கிறது

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அட...

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்
சுந்தர்.சி இயக்கப் போகும் திரைப்படம் 'சங்கமித்ரா' .சரித்திரக்கால கதை என்பதால் 'பாகுபலி' போன்று 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டனர். முதலில் விஜய் கால்ஷீட் கேட்டனர்,அவர் மறுத்தார், அடுத்து சூர்யாவிடம் கேட்டனர் அவரும் 'நோ' சொல்லி விட்டார். அதன்பின் மகேஷ்பாபுவை சந்தித்தனர் அவர் அரைமனதோடு ஒ.கே சொல்லி அனுப்பினார்.

                                மகேஷ்பாபுவை தொடர்ந்து பெரும் சம்பளம் பேரத்தோடு ஜெயம் ரவி, ஆர்யாவிடம் தேதிகள் கேட்டனர். 'சங்கமித்ரா' படத்தை நட்சத்திர பட்டாள படமாக உருவாக்க திட்டமிட்டனர். இதற்கிடையில் ராஜமெளலி போன்று ஹிஸ்டாரிக்கல் கதையை படமாக்கும் திறன் சுந்தர்.சி-க்கு இருக்கிறதா? ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கிய படங்களின் வியாபாரம் என்ன? என்பது குறித்து மகேஷ்பாபு ரகசியமாக விசாரித்தார்.  சுந்தர்.சி இயக்கிய படங்கள் அத்தனையும் கரம் மசாலா படங்கள் என்றும்,  முப்பது கோடி தாண்டி எந்த படமும் பிசினஸ் ஆனதே இல்லை என்று தகவல்வர அதிர்ந்து போனார், மகேஷ்பாபு. வெறும் 30 கோடி வியாபாரம் மட்டுமே கொண்ட ஒரு டைரக்டர் எப்படி 250 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பார்? அந்த படத்தை எப்படி பிசினஸ் செய்வார்கள்/ என்பது குறித்து கவலை கொண்டார்.

                           இந்த சூழ்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹிட் டைரக்டர் கொரட்டலா சிவா மகேஷ்பாபுவை அணுகி சொன்ன கதையைக் கேட்டு பிரமித்து போனார், மகேஷ்பாபு. கொரட்டலா சிவா இயக்கிய முதல்படம் 'மிர்ச்சி' பிரபாஸ் நடித்த இந்தப்படம் ஹிட், அடுத்து மகேஷ்பாபு நடிப்பில் இயக்கிய 'ஶ்ரீமந்துடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டாக சந்தோஷமான மகேஷ் காஸ்ட்லியான கார் ஒன்றை சிவாவுக்கு பரிசாக கொடுத்தார். சமீபத்தில் ஜூனியர் என்டி ஆர் நடித்து வெளியான 'ஜனதா கேரேஜ்' பம்பர் ஹிட்டாக நெகிழ்ந்துபோன  ஜூனியர் சிவாவுக்கு பிரமாதமான  சொகுசு பங்களாவை பரிசாக கொடுக்கப் போகிறார்.

                         சிவா  டைரக்‌ஷனில் நாம் ஒரு படம் நடிக்க மாட்டோமா? என்று தெலுங்கு முன்னணி ஹீரோக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நிலையில்  தன்னைத்தேடிவந்து சிவா  சொன்ன கதையிம் மகேஷ் மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் போனார்.  சுந்தர்.சி-யின் 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கும் திட்டத்தில் இருந்து விலகிக்கொண்டார், மகேஷ்பாபு. கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தாணய்யா தயாரிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்த பிறகு  சிவா  இயக்கும் படத்தின் ஷூட்டிங் 2017 ஜனவரியில் ஹைதராபாத்தில் துவங்குகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About