ஏன் இதில் மட்டும் அத்தனை காதல் விக்ரமிற்கு?

விக்ரம் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். தமிழநாடு அரசு விருது, ப்லிம் பேர் விருது ஏன் தேசிய விருது என அனைத்து விருதுகளையும...

விக்ரம் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். தமிழநாடு அரசு விருது, ப்லிம் பேர் விருது ஏன் தேசிய விருது என அனைத்து விருதுகளையும் வென்று விட்டார்.

தனக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், சக நடிகர்கள் போல் மாஸ் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து ஒரு சேஃப்(Safe) வட்டத்திற்குள் பயணிக்கலாம்.

ஆனால், கமர்ஷியல் படத்தில் கூட வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக படத்திற்கு படம் உடல், முகம் என மாற்றி நடிக்கும் ஒரு அற்புதக்கலைஞன்.

ஒரு நாள் இவரிடம் ஏன் சார் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என கேட்ட போது ‘இது கஷ்டம் இல்லை, காதல், எனக்கு எதிலுமே கஷ்டம் இல்லை.

எனக்கு பிடித்த இந்த சினிமாவில் ஒவ்வொரு விஷயத்தையும் நான் காதலித்து தான் செய்கிறேன்’ என்றார்.

இதை சாதரணமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் விக்ரம் இன்றுடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 26 வருடங்கள் ஆகின்றது.

இன்றும் ஏதோ நேற்று நடிக்க வந்த நாயகன் போல் தான் ஓடுகிறார், ஏனெனில் விக்ரம் சேது என்ற வெற்றிக்காக 10 வருடத்திற்கு மேல் தவம் இருந்தார்.

அதனால் என்னமோ சினிமா மேல் அப்படி ஒரு பைத்தியம் இவருக்கு, தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்று இல்லாத கலைஞன் விக்ரம் மட்டும் தான். அவரின் திரைப்பயணம் இன்று போல் என்றும் வெற்றி பவணி வர  வாழ்த்துக்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog