பணப்பரிமாற்றம் நடந்தது உண்மை தான், விஷாலை மிரட்டியது கதை வேறு- நாசர் ஓபன் டாக்

கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டின் ஹாட் டாபிக் சிவகார்த்திகேயன் கண்ணீர் பேட்டி தான். பலரும் யார் சிவகார்த்திகேயனை மிரட்டியது என கேட்டு வருகி...

கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டின் ஹாட் டாபிக் சிவகார்த்திகேயன் கண்ணீர் பேட்டி தான். பலரும் யார் சிவகார்த்திகேயனை மிரட்டியது என கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷாலும் தன் பங்கிற்கு என்னையும் மிரட்டினார்கள் என கூறினார். இதற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் விளக்கம் கூறியுள்ளார்.

இதில் ’தயாரிப்பாளர் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' மதன், சிவகார்த்திகேயன் தன்னிடம் புதுப்பட ஒப்பந்தத்துக்காக அட்வான்ஸ் பணம் வாங்கியதாக சொல்கிறார். சிவாவோ மறுக்கிறார், உண்மையில் இருவருக்கும் இடையில் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது.

அது புதுப்படத்துக்கான அட்வான்ஸ் பணமா? இல்லை வேறு தனிப்பட்ட முறையில் பெறப்பட்டதா? என்பது குறித்து இருவரையும் ஒன்றாக அழைத்து விசாரிக்க இருக்கிறோம்.

மேலும், விஷால் தன்னை மிரட்டியதாக சொன்னது பழையக்கதை, அதற்கும் சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கும் சம்மந்தமில்லை’ என நாசர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog