இரத்தத்தை சுத்தமாக்கக் கூடிய சில இயற்கை வைத்திய முறைகள்...

 இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்த...

 இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

1. பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2. செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். செம்பருத்திப்பூவின்  இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

3. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

5. நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

6. ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில்  கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும். 1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில்  கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

7. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

8. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

9. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

10. திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும். திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About