இந்த ஃபார்முலாவை பின்பற்றிதான் சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றிபெறுகிறதாம்!!

 தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். இவர் 10 படங்களில் மட்டுமே நடித்தாலும் அதிக ரசிகர்களையும், அதிக சம்பளத...

 தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். இவர் 10 படங்களில் மட்டுமே நடித்தாலும் அதிக ரசிகர்களையும், அதிக சம்பளத்தை பெற்று முன்னணி நடிகராக
மாறியுள்ளார்.

இவருக்கு தொலைக்காட்சிகளில் பணிபுரியும் போதே அதிக ரசிகர்கள் இருந்ததும் கூட ஒரு காரணம். சினிமாவில் குறுகிய காலத்தில் ஸ்டார் நடிகர் என்ற இடத்திற்கு முன்னேறுவதற்கு அவர் பின்பற்றி வரும் நான்கு கொள்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது.

அவை என்னவென்றால் அவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் என்பதாலும், ரத்தம் சிந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடிப்பது ஒரு காரணம். பணத்திற்காக மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், தனக்கு பிடித்த கதை உள்ள படங்களை தேர்வு செய்வது மற்றும் புகைப்பிடித்தல் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பது என்ற கொள்கைகளை கடைபிடிப்பதுதான் இவரது வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரின் படங்களான தொடர் வெற்றியை தந்த ரஜினி முருகன், ரெமோ போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படம் நவம்பர் 11ல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog