’விஜயசேதுபதியுடன் நான் ஆடுறேன் டான்ஸு... அதுக்கு அள்ளும் அப்ளாஸூ!’ - டி.ராஜேந்தர் உற்சாகம்

தமிழ் சினிமாவில் 1990-களில் எப்படி பரபரப்பாக சுறுசுறுப்பாக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாரோ அதைப்போலவே கிஞ்சித்தும் குறைவில்லாமல் தமிழ...

தமிழ் சினிமாவில் 1990-களில் எப்படி பரபரப்பாக சுறுசுறுப்பாக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாரோ அதைப்போலவே
கிஞ்சித்தும் குறைவில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில்  பிஸியாக இருக்கிறார், சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  டிராஜேந்தரும், விஜய் சேதுபதியும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்குபட வேலையில் பிஸியாக இருந்த டி.ராஜேந்தரிடம் பேசினோம்.


'' டைரக்டர் கே.வி. ஆனந்த் எனக்கும், விஜய சேதுபதிக்கும் சமமான கேரக்டரை உருவாக்கி இருக்கிறார். என் கதாபாத்திரம் பற்றி சொல்வதற்கு எனக்கு ஆசைதான் ஒரு  படத்துக்கு கேப்டன் டைரக்டர்தான் அவரைமீறி நான் வெளியே சொன்னால் அது நாகரீகமாக இருக்காது.  தெலுங்கு படங்களில் வேலை பார்ப்பதால் அடிக்கடி ஹைதராபாத் சென்று கொண்டு  இருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலிய செல்ல இருக்கிறேன்.


எனக்கென்று தனியாக ரோலை டைரக்டர் கே.வி.ஆனந்த் செதுக்கி இருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு என் கேரக்டரை  வேறொரு  கோணத்தில் வடிவமைத்து இருக்கிறார்,  நானும் விஜயசேதுபதியும் இணைந்து நடனமாடும் பாடல் காட்சியை படமாக்க போகின்றனர் டைரக்டர் கே.வி.ஆனந்த். இந்த பாடல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About