அனுபவம்
நிகழ்வுகள்
'அவ்வை சண்முகி'க்கு ஜெமினியை பரிந்துரைத்த சிவாஜி!
October 13, 2016

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் 'அவ்வை சண்முகி'. தேவா இசையமைத்த இப்படத்தை ரவீந்திரன் மற்றும் ஹரி தயாரித்திருந்தார்கள். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'அவ்வை சண்முகி' படத்தில் முதலில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக தான் இருந்திருக்கிறது. அப்போது அக்கதாபாத்திரத்தை பயங்கர வலுவாக, காதல் எல்லாம் இல்லாமல் எழுதியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அப்போது திடீரென சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, "பசங்க நடிக்க வேண்டாம்" என்று சொல்கிறார்கள் என விலகியிருக்கிறார்.
சிவாஜி நடிக்க முடியாமல் போன போது, "டேய்.. ஜெமினி கணேசன் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலிப்பார். அவரை இந்த வேடத்தில் நடிக்க வை, நன்றாக இருக்கும்" என தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து படக்குழு ஜெமினி கணேசனை அணுகி அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்தத் தகவலை 'ரெமோ' நன்றி விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டார்.
0 comments