விஜய்க்காக அட்லி கதையை டியூன் செய்த 'பாகுபலி' மாஸ்டர்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்  'பாகுபலி' ஸ்டைலில் தயாரிக்கும் சரித்திர திரைப்படம் ' சங்கமித்ரா'  .அந்தப் படத்தை சுந்தர்.சி ...

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்  'பாகுபலி' ஸ்டைலில் தயாரிக்கும் சரித்திர திரைப்படம் ' சங்கமித்ரா'  .அந்தப் படத்தை சுந்தர்.சி
இயக்குகிறார்.  இந்த படத்தில் இடம்பெறும் முக்கியமான சரித்திர  கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய்யை அணுகினார்கள். அதற்காக விஜய் இதுவரை பெறாத பெருந்தொகையை சம்பளமாக தருவதற்கு முன் வந்தனர். ஏற்கெனவே ஹிஸ்டாரிக்கல் பாணியில் உருவான 'புலி'படம் தோல்வியை சந்தித்ததால் தனக்கு ராஜா காலத்து கதை சரிப்பட்டு வராது என்று கூறி அந்த புராஜெக்ட்டில் இருந்து  விலகிக்கொண்டார். விஜய்க்கு பதிலாக தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை 'சங்கமித்ரா' படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.


                        அடுத்து  சமூக கதையுள்ள படத்தில் நடிக்க  தேனாண்டாள் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்த விஜய் அந்த படத்தை இயக்குவதற்கு அட்லியை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். ஆனால், அட்லி சொன்ன கதையைக் கேட்டு விஜய்க்கு திருப்தி ஏற்படவில்லை. கதை, திரைக்கதையில் பெரும் திறமை கொண்ட 'பாகுபலி' இயக்குனர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் அவர்களிடம் அட்லியை அனுப்பி வைத்தார், விஜய். தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் ஏற்கெனவே மூன்று தெலுங்கு படங்களை இயக்கி இருக்கிறார். அவற்றில் நாகார்ஜூனா நடித்த 'ராஜண்ணா' பெருவெற்றி பெற்றது.


                             ராஜமௌலி இயக்கிய படங்களில் ஸ்டூடன்ட் நம்பர் ஒன்,மரியாதை ராமன்னா தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் கதை. குஜராத் பூகம்பத்தில் சிக்கிய ஒரு சிறுமியை அவளுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வது போல் ஒரு மலையாள படத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். அதே படத்தை அப்படியே இந்தியாவில்  காணாமல்போன பாகிஸ்தான் சிறுமியை அவளுடைய நாட்டுக்கே கொண்டு சென்றுவிடும் கதையாக மாற்றி அமைத்தார், பிரசாத். இந்தியில் உருவான அந்த படத்தில் சல்மான்கான் நடித்து பிரமாதமாக ஓடியது.


                    விஜய் நடிக்கும் படத்துக்காக  உருவாக்கி வைத்து இருந்த கதையை அப்படியே வரிபிசகாமல் ஒப்புவித்தார், அட்லி. மொத்தக்ம கதையையும் முழுசாக கேட்டு முடித்தார் விஜயேந்திர பிரசாத்.  மம்முட்டி நடித்த மலையாள படத்தை எப்படி இந்தியில் சல்மான்கானுக்கு ஏற்ப இந்தியில் மாற்றங்களை செய்தாரோ அதுபோல அட்லியின் கதையில் ஆங்காங்கே பல இடங்களில் முக்கியமான திருப்பம் கொண்ட மாற்றங்களை செய்தார், பிரசாத். இறுதியாக விஜய்யிடம் முழுக்கதையையும் அட்லி சொல்ல  விஜய்க்கு பரமதிருப்தி. கதையை மாற்றி அமைத்து கொடுத்ததற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு கோடியைத் தாண்டும் சன்மானம் வழங்கியதாம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About